முன்சிகஞ்ச் மாவட்டம்


முன்சிகஞ்ச் மாவட்டம் (Munshiganj District) (வங்காள: মুন্সীগঞ্জ), தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் மத்தியகிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் முன்சிகஞ்ச் நகரம் ஆகும். வரலாற்று காலத்தில் இந்நகரத்தை விக்கிரம்பூர் என்று அழைக்கப்பட்டது.[1][2]

வங்காளதேசத்தில் முன்சிகஞ்ச் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

முன்சிகஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் டாக்கா மாவட்டம் மற்றும் நாராயன்கஞ்ச் மாவட்டம்|நாராயாண்கஞ்ச் மாவட்டங் களும்]], தெற்கில் சரியத்பூர் மாவட்டம் மற்றும் மதாரிபூர் மாவட்டங்களும், கிழக்கில் சந்திரபூர் மாவட்டம் மற்றும் கொமில்லா மாவட்டத்தின் சில பகுதிகளும், மேற்கில் பரித்பூர் மாவட்டம் மற்றும் டாக்கா மாவட்டத்தின் சில பகுதிகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

1004.29 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக முன்சிகஞ்ச் சதர், லௌஹாகஞ்ச், சிறீநகர், சிராஜ்திகான், தோகிபாரி மற்றும் கோஜ்ரியா என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் இரண்டு நகராட்சி மன்றங்களையும், அறுபத்தி ஏழு கிராம ஒன்றியக் குழுக்களையும், 564 வருவாய் கிராமங்களையும், 919 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் ஆகும். தொலைபேசி குறியிடு எண் ஆகும். இம்மாவட்டம் வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இதன் அஞ்சல் சுட்டு எண் 1500 ஆகும். தொலைபேசி குறியீடு எண் 02 ஆகும். இம்மாவட்டம் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [3]

பொருளாதாரம்

முன்சிகஞ்ச் மாவட்டத்தில் தாலேஷ்வரி ஆறு, பத்மா ஆறு, மெக்னா ஆறு, சோட்டா பிரம்மபுத்திரா ஆறு, ஈசாமதி ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், நில வளமும் மிக்கதாக உள்ளது. வேளாண் பொருளாதாரத்தையே நம்பியுள்ள் இம்மாவட்டத்தில் நெல், உருளைக்கிழங்கு, மா, பலா, எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

மக்கள் தொகையியல்

1004.29 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 14,45,660 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,21,552 ஆகவும், பெண்கள் 7,24,108 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.10 % ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1439 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 56.1 % ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.