முதல் குடிமகன்

முதல் குடிமகன் (ஆங்கிலம்:The First Citizen), (இலத்தீன்: Princeps) என்பவர் பொதுவாக ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது அரசர் அல்லது அரசி, அல்லது நாட்டின் மிக உயரிய அதிகாரத்துடன் கூடிய பதவியில் உள்ளவர்களை அந்நாட்டின் முதல் குடிமகன் என்று அழைப்பர்.[1] இந்தியாவின் முதல் குடிமகன், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இங்கிலாந்தின் முதல் குடிமகன் அந்நாட்டின் தற்போதைய அரசியாவர். சவுதி அரேபியா போன்ற மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் அந்நாட்டு மன்னரே முதல் குடிமகன் ஆவார். சப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் பெயரளவிற்கு மன்னர்கள் இருப்பினும், அவர்களை அந்நாடுகள் இன்றளவிலும் முதல் குடிமகனாக ஏற்றுக்கொண்டு பெருமைப்படுத்துகின்றனர். ஜனநாயக குடியரசு ஆட்சி நடைபெறாத, சர்வாதிகாரிகள் ஆளும் நாட்டின் தலைவர்களும் முதல் குடிமகன் ஆகிறார்.

முதல் குடிமகன் என்றழைக்க காரணங்கள்

ஒரு நாட்டின் உயர் அதிகாரம் மிக்க தலைவர், அந்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுகிறார். மேலும் அவரே நாட்டின் உயர் அதிகாரம் படைத்த நிர்வாகத் தலைவராகவும் உள்ளார். நாட்டில் நடைபெறும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முதல் குடிமகன் பெயரால் நிறைவேற்றப்படுகிறது. அரசின் சார்பாக மேற்கொள்ளப்படும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு ஒப்பந்தங்கள் அனைத்தும், நாட்டின் முதல் குடிமகன் பெயரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் அதிபரை மட்டுமே நாட்டின் முதல் குடிமகன் என்றழைக்கின்றனர்.[2]

மானிட அறிவியல்படி நாட்டின் முதல் குடிமகன்கள்

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் முதன் முதலாக வாழ்ந்த மக்களினத்தையே முதல் குடிமகன்கள் என்றும் மானிட அறிவியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.[3].[4]

மேற்கோள்கள்

  1. Charlton T. Lewis, Charles Short (1897). "princeps, cĭpis, adj.". A Latin Dictionary. பார்த்த நாள் 2009-04-21.
  2. https://in.answers.yahoo.com/question/index?qid=20130926104938AA2w0Hl Who is The First Citizen of a Nation
  3. http://surpriseulagam.blogspot.in/2012/07/blog-post_11.html இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமை, விருமாண்டி எனும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது.
  4. https://www.facebook.com/permalink.php?story_fbid=204030003039548&id=141482842472
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.