முக்தாம்பாள் சத்திரம்
முக்தாம்பாள் சத்திரம் என்பது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சத்திரம் ஆகும். இது தஞ்சாவூர் மராத்திய அரசரான சரபோஜியால் இராமேசுவரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டது ஆகும்.

அமைவிடம்
முக்தாம்பாள் சத்திரம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ளது. சத்திரம் அமைந்துள்ள பகுதி முக்தாம்பாள்புரம் எனப்படும். இந்த சத்திரமானது 1802 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் பொங்கள் நாளை ஒட்டித் திறக்கப்பட்டதாக அங்கு உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.[1]
முக்தாம்பாள்
முக்தாம்பாள் இரண்டாம் சரபோஜியின் காதல் கிழத்தி ஆவார். அவருடைய நினைவாக இச்சத்திரம் அமைக்கப்பட்டது. ஒரத்தநாட்டில் இந்த சத்திரம் உட்பட அக்ரகாரம், கோயில், குளம் போன்றவற்றையும் அவர் அமைத்தார். இவ்வாறே சைதாம்பாள்புரம் என்ற ஊர் அவருடைய மனைவியருள் ஒருவரின் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். [2]
கலை நுட்பம்
இந்தச் சத்திரம் கலை நுட்பங்களைக் கொண்டு அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில் வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. [3]
தற்போதைய நிலை
தற்போது இச் சத்திரம் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
மேற்கோள்
- தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு, பகுதி 21. சென்னை: http://FreeTamilEbooks.com.
- முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, ஊர்ப்பெயர்களில் அரச மரபினர் (தஞ்சை மாவட்டம்), தஞ்சை இராசராசேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலர், 1997
- Not mere rest houses, The Hindu, 21.10.2011