மு. பாலசுந்தரம்
முருகேசு பாலசுந்தரம் (Murugesu Balasundaram, (ஏப்ரல் 7, 1903 - திசம்பர் 15, 1965) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.
எம். பாலசுந்தரம் நாஉ | |
---|---|
![]() | |
கோப்பாய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1960–1965 | |
முன்னவர் | சி. வன்னியசிங்கம், இதக |
பின்வந்தவர் | சி. கதிரவேலுப்பிள்ளை, இதக |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஏப்ரல் 7, 1903 |
இறப்பு | 15 திசம்பர் 1965 62) | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி, சுயேட்சை |
வாழ்க்கை துணைவர்(கள்) | சின்னம்மா சின்னத்தம்பி |
பிள்ளைகள் | ஞானசண்முகன், யோகசுந்தரம், பாலகிருஷ்ணன், சிவஞானசுந்தரம், சோமசுந்தரவல்லி, யோகேஸ்வரி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கில்னர் கல்லூரி கொழும்பு ரோயல் கல்லூரி கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி டிரினிட்டி ஹால்,கேம்பிரிட்ஜ் |
தொழில் | வழக்கறிஞர், ஊடகவியலாளர் |
வாழ்க்கைச் சுருக்கம்
மெதடிஸ்த குரு வண. கே. எஸ். முருகேசு என்பவருக்குப் பிறந்தவர் பாலசுந்தரம். யாழ்ப்பாணம் கில்னர் கல்லூரியிலும், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கல்வி பயின்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று அறிவியலில் பட்டம் பெற்றார். புலமைப் பரிசில் பெற்று லண்டன் சென்று அங்கு கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுத் திரும்பினார். சிறிது காலம் அவர் ஊடகவியலாளராகப் பணியாற்றிய பின்னர் சட்டம் பயின்று சட்ட வல்லுனரானார்.
அரசியலில்
பாலசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணைந்து மார்ச் 1960 தேர்தலில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டி. குணரத்தினம் என்பவரை 5,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்றார்[1]. சூலை 1960 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்[2]. 1965 இல் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலசுந்தரம், 1965 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 568 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்[3].
மேற்கோள்கள்
- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 23.
- "Result of Parliamentary General Election 1960-03-19". Department of Elections, Sri Lanka.
- "Result of Parliamentary General Election 1960-07-20". Department of Elections, Sri Lanka.
- "Result of Parliamentary General Election 1965". Department of Elections, Sri Lanka.