மு. சிவலிங்கம் (கணினி தொழில்நுட்ப எழுத்தாளர்)

மு. சிவலிங்கம் (பிறப்பு: செப்டம்பர் 12, 1951)என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த கணினி சார் தொழில்நுட்ப எழுத்தாளர். இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர் கணினி தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துள்ளார்.

மு. சிவலிங்கம்
பிறப்புமு. சிவலிங்கம்
செப்டம்பர் 12, 1951
கூவக்காபட்டி, திண்டுக்கல் மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்சென்னை, இந்தியா.
தேசியம்இந்தியர்
கல்விகணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டம்
பணிபொறியாளர் (ஓய்வு)
இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனம்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்முனியப்பன் (தந்தை),
சின்னக் கண்ணம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
வி. கே. சாரதா
பிள்ளைகள்ஜென்னி சினேகலதா (மகள்)
லெனின் ரவீந்திரநாத் (மகன்)
உறவினர்கள்சகோதரர் -1,
சகோதரி -1
வலைத்தளம்
www.sivalingam.in

எழுதியுள்ள நூல்கள்

  1. ஐகியூ தேர்வுகள் எழுதுவது எப்படி?
  2. டாஸ் கையேடு
  3. உள்ளங்கைக்குள் உலகம்
  4. டி’பேஸ் வழியாக சி-மொழி
  5. கம்ப்யூட்டர் இயக்க முறைகள்
  6. மின்னஞ்சல்
  7. வருங்கால மொழி சி#
  8. +1 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
  9. +2 கணிப்பொறியியல் பாடநூல் – தொகுதி 2
  10. தகவல் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்
  11. நெட்வொர்க் தொழில்நுட்பம்

பங்களிப்புகள்

இவர் தமிழ்நாடு அரசு மற்றும் சில அமைப்புகளில் பொறுப்பேற்று முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

  • பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி எம்சிஏ மாணவர்களுக்குக் கவுரவ ஆசிரியர் (1996-2003)
  • தமிழக அரசு பொது நூலகப் புத்தகத் தேர்வுக்குழு உறுப்பினர் (1998)
  • தமிழக அரசு திரு.சுஜாதா தலைமையில் அமைத்த கலைச்சொல்லாக்கக் குழுவில் 200 சொற்கள் உருவாக்கம் (1999)
  • தமிழக அரசு முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைத்த தகவல் தொழில்நுட்பக் கலைச்சொல்லாக்கக் குழுவில் 8000 சொற்கள் உருவாக்கம் (2000)
  • மணவை முஸ்தபா அவர்கள் வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி தொகுதி 1, 2 உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பு (1999, 2001)
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ், எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்புத் தமிழ் இடைமுகத்துக்கான கலைச்சொல்லாக்கம் (2003)
  • தமிழக அரசின் கணிபொறியியல் பாடத்திட்டக் குழு உறுப்பினர் (2004-2005)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.