மு. சரவணன்

டத்தோ முருகன் சரவணன் (Murugan Saravanan, பொதுவாக எம். சரவணன் (M. Saravanan), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நஜீப் துன் ரசாக்கின் தலைமையிலான கூட்டரசில் நடுவண் பிரதேச நகர்ப்புற துணையமைச்சராகப் பொறுப்பில் உள்ளார்.[2] இவர் மலேசிய இந்தியர் காங்கிரசின் உதவித் தலைவராகவும், கூட்டரசு பிரதேச ம.இ.கா தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். தமிழ் இலக்கியம், சைவ சமயம் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவராகவும். அரசியல் தலைவர்கள் மத்தியில் நல்ல தமிழ்ப் பேச்சாளராகவும் திகழ்கின்றார்.

டத்தோ

எம். சரவணன்
M. Saravanan
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச்சு 2008
முன்னவர் வீரசிங்கம் சுப்பையா ம.இ.காதேமு
தப்பா, பேராக் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி மலேசிய இந்திய காங்கிரசுதேசிய முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) வி. கவிதா[1]
பணி நாடாளுமன்ற உறுப்பினர்
இணையம் http://msaravanan68.blogspot.com/

நாடாளுமன்றத்துக்குத் தெரிவாக முன்னர் சரவணன் மேலவை உறுப்பினராக இருந்தார்.[3] 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் பேராக் மாநிலத்தின் தப்பா தொகுதியில் ம.இ.கா. போட்டியிட்டு மக்கள் நீதிக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து வென்றார். மலேசிய இந்தியக் காங்கிரசு சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூவரில் சரவணனும் ஒருவர்.[4].

தேர்தல் முடிவுகள்

மலேசிய நாடாளுமன்றம்: பி72 தப்பா, பேராக்[5]
ஆண்டு தேசிய முன்னணி வாக்குகள் வீதம் எதிர்க்கட்சி வாக்குகள் வீதம்
2008 மு. சரவணன் (ம.இ.கா) 14,084 53% தான் செங் தோ (கெடிலான்) 11,064 41%

மேற்கோள்கள்

  1. "Court Allows Saravanan To Strike Out Former Business Partner's Application". Bernama. 13 ஏப்ரல் 2010. http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=490224.
  2. "M. Saravanan, Y.B. Datuk" (Malay). Parliament of Malaysia. பார்த்த நாள் 16 June 2010.
  3. "All made it – except for one". த ஸ்டார். 11 மே 2003. http://thestar.com.my/news/story.asp?file=/2003/5/11/nation/lnwinner&sec=nation. பார்த்த நாள்: 6 சனவரி 2010.
  4. "End For Samy Vellu's Legacy After Historic Loss At Sg Siput". பெர்னாமா. 9 மார்ச்சு 2008. http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=319468.
  5. "Malaysia Decides 2008". The Star. பார்த்த நாள் 6 January 2010..

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.