மு. அ. முத்தையா

மு. அ. முத்தையா செட்டியார் (M. A. Muthiah Chettiar) ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் , சென்னை மேயர், சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர். இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ராஜா
சர்

முத்தையா அண்ணாமலை முத்தையா செட்டியார்
கல்வி அமைச்சர் (சென்னை மாகாணம்)
பதவியில்
அக்டோபர் 10, 1936  சூலை 14, 1937
Premier ராமகிருஷ்ண ரங்கா ராவ்,
பி. டி. ராஜன்,
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
ஆளுநர் ஜார்ஜ் பிரெடெரிக் ஸ்டான்லி
முன்னவர் எஸ். குமாரசாமி ரெட்டியார்
பின்வந்தவர் ப. சுப்பராயன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகத்து 5, 1905
கானாடுகாத்தான்,
மதுரை
இறப்பு மே 12, 1984(1984-05-12) (அகவை 78)
மதராஸ்,
இந்தியா
அரசியல் கட்சி நீதிக் கட்சி

இளமைக் காலம்

முத்தையா சென்னை வேப்பேரியில் பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி, ஈவார்ட் பள்ளி, ராமானுஜம் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 1925 ஆம் ஆண்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்வு

பின்னர் 1929 ஆம் ஆண்டு தமது 24 ஆம் வயதில் சென்னை நகராட்சி உறுப்பினரானார். 1931 ஆம் ஆண்டில் சென்னை நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1933 ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936 ஆண்டு சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி, மருத்துவம், சுங்கம் ஆகிய துறைகளின் அமைச்சர் ஆனார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957 /StatRep_Madras_1957.pdf

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.