மீன்பிடி வலை

மீன் பிடி வலை என்பது மீன் பிடிக்கப் பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது சிறுதொழில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மீனவர்கள் பல மீன் இனங்களில் சிலவற்றை மட்டும் பிடிப்பதற்கு ஏற்ப பல வகையான வலைகளைப் பயன்படுத்திப் பிடித்து வந்தனர் அவற்றில் எடுத்துக்காட்டுக்குச் சில - வீச்சு வலை, சாட்டு வலை, பெரிய வலை, மணி வலை, பரு வலை, சூடை/மத்தி வலை, நண்டு வலை [1] சுருக்குமடி வலை போன்ற வெவ்வேறு வலைகளை வைத்து மீன்பிடி தொழில் நடைபெறுகிறது.

கைத் தூண்டில்

வலை வகைகள்

மீன் பிடி வலைகள் மிதமான மீன்பிடி வலைகள், தீவிர மீன்பிடி வலைகள் என இரு வகைப்படும்.

மிதமான மீன் பிடி வலைகள்

fishing net with small plastic floats
A landing net
Coracles net fishing on the River Teifi, Wales 1972.
கேரளத்தி்ல் பயன்படுத்தப்படும் சீன வலை
Three fykes at the Zuiderzeemuseum
Amateur fisher, Alanya, Turkey
Commercial trawl net

செவுள் அல்லது பொருத்தப்பட்ட வலைகள்

செவுள் வலை என்பது ஒரு பழைமையான மீன்பிடிப்பு முறையாகும். இம்முறையில் வலையை கடல் அடிமட்டம் வரை அல்லது கடல் மத்தியில் விரித்துவிடுவார்கள். அதில் மீன்கள் மாட்டிக் கொள்ளும். வலைகளில் மாட்டிய மீன்கள் வெளியே செல்ல முயற்சிக்கும். பெரிய வகை மீன்கள் செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும். மீன் இனம் மற்றும் மீன் அளவுக்கு ஏற்றது போல் வலை விரிக்க வேண்டும்.

மா பாச்சு வலை

இவ்வகை வலையில் மூன்று அடுக்குகள் உள்ளன. வெளி மற்றும் உற்பகுதியில் சாதாரணக் கண்ணி மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் நடுபகுதியை உயர்ந்த கண்ணியால் பொருத்தப்பட்டு இருக்கும். வலையை செங்குத்தாக மிதக்கும்படி தொங்கவிடும் போது மீன்கள் மாட்டிக்கொள்ளும்.

சிக்கவைக்கும் வலை

இந்த வலை செவுள் வலையை போன்றது. ஆனால் பிரிந்திருக்கும். சிறிய அளவு மற்றும் குறைவாக மிதக்கும். இதில் செவுள் வலையை விட நிறைய மீன்களை பிடிக்கலாம்.

தீவிர மீன்பிடிப்பு வலைகள்

வலை மூலம் மீன் பிடித்தல்-கேரளா
வலை மூலம் மீன் பிடித்தல்- ஒடிசா

நிறைய மீன்களை பிடிக்க மற்றும் நிறைய மீன்கள் தேவைப்படும் போது தீவிர அல்லது நேரடி மீன்பிடிப்பு முறை ஏற்றதாகும். மனிதன், விலங்கு மற்றும் இயந்திர வலு மூலம் மீன் வலைகளை நேரடியாக தண்ணீரில் வீசி மீன் பிடிப்பது தீவிர மீன்பிடிப்பு ஆகும். பல வேலைகளில் ‘மிதமான’ மீன் பிடிப்பு வலைகளை விட (செவுள் வலை மற்றும் பொறி) தீவிர மீன்பிடிப்பு வலைகளின் ஆற்றல் திறன் அதிகமானது.

சுருக்குமடி வலை

தமிழகத்தின் தென்கடலில் வாடைக் காற்றுக் காலங்களில் மட்டுமே இந்தச் சுருக்குமடித் தொழில் நடக்கிறது. சுருக்குமடியில் நீரோட்டம் சார்ந்து, மீன்சாய்வு சார்ந்து லட்சக் கணக்கில் மீன்பாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த முறையில் மீன்பிடித்தல் என்பது காற்றையும் கடலையும் அதன் பல்வேறு நீரோட்டங்களையும் அறிந்த பாரம்பரிய மீனவரைத்தவிர, சாதாரண தொழில்முறை மீனவராலோ, வணிக மீனவராலோ செய்ய முடியாத தொழில் ஆகும். இதில் மீன்பிடிக்க வள்ளத்துக்கு ஆறு நபர்களோ, எட்டு நபர்களோ சேர்ந்து, இரண்டு வள்ளங்கள் இணைந்து செய்யும் கூட்டுத்தொழில். வாணிவாடும், வாடைக் காற்றும் இருக்கும் காலங்களிலேயே பரந்த கடலில் இடம்பெயரும் இந்த மீன் கூட்டம் கரையிறங்கும். கரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து கடல் மைல்களுக்கு உள்ளாகவே பாரம்பரிய மீன்பிடிக் கடற்பரப்பிலேயே நடக்கும் இந்தத் தொழில், காற்றுமாறி சோழக் காற்றும், சோணிவாடு நீரோட்டமும் வந்தால் இல்லாமலாகிவிடும். மீன்கள் ஆழ்கடல் நோக்கிப் போய்விடும். கடலில் மாப்பு (மீன் கூட்டம்) வருவதைக் கரையிலிருந்து பார்த்த பிறகுதான், வள்ளங்களை இறக்கி மடி வளைத்து மீன் பிடிப்பார்கள். நெத்திலிக்கு சாளை இணை மீன், ஒன்றை ஒன்று சாப்பிடுவதில்லை. ஆனால், இவற்றைச் சாப்பிடுவதற்காக பாறையும், சூரையும், கெழுதும் துணைமீன்கள். கூட்டம் அவற்றின் பின்னாலேயே வரும். இந்தச் சுருக்குமடி மீன்பிடித் தொழில் என்பது மேலெழும்பி வரும் மீன்களை விரட்டிப் பிடிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்பம் ஆகும். இது. அந்தக் காலத்தில் கடற்கரை ஊர்களில் நடைமுறையில் இருந்த குத்துவலை அல்லது கரைமடி என்பதன் அடுத்த கட்டம் ஆகும். [2]

கோல் இழு வலை

இது ஒருவகையான இழு வலையாகும். வலையின் வாயிலை ஒரு கோலின் ஒவ்வொரு முனையோடும் சேர்த்து கட்டிவிடுவர். அதை கடலின் மேல் மிதந்து போகும்படி செய்வர். இழு வலை பொருந்தியதும் அதனுடன் அடிமட்டச் சங்கிலி மற்றும் கனச்சங்கிலியையும் ஆழத்திற்கு ஏற்றமாதிரி பொருத்தப்படும். இதனால் அதிக மீன்கள் கிடைக்கும். இந்த இழுவை வலையினால் மீன்களை கீழிருந்து மேலே இழுத்து வலையினுள் தள்ளப்படுகின்றன. நவீன கோல் இழு வலையின் அளவு 4-12செ.மீ முதல் இருக்கும். வலையின் அளவு, கோல் நீளம் ஆகியவை பயன்படுத்தும் இயந்திரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

அடிமட்ட பலகை இழு வலை

அடிமட்ட பலகை (அல்லது) கீழ் இழுவலை என்பது கடல்மேல் இழுத்து செல்லும் வலையாகும். இவ்வலை மிகவும் பெரியது. வலையின் முன் பக்கம் இறகு போன்ற வடிவத்தில் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும். மீன்கள் கூட்டமாக பலகையின் நடுவில் வரும் அதன்பின் வலைக்குள் மாட்டிக்கொள்ளும். புனல் போன்ற கருவி மூலம் மீன்களைச் சேகரிப்பர்.

மிதவை இழுவலை

நீந்தும் மீன்கள், மீன் திரள் பகுதியிலுள்ள மீன்கள் மற்றும் கடற்பரப்பு மீன்களைப் பிடிக்க உதவுவது மிதவை இழுவலை ஆகும். கொடுவா, கானாங்கத்தி, கெரிங் போன்ற மீன்களை பிடிக்க மிதவை இழுவலை பயன்படுகிறது. கடல் மேலிருந்து கடல் அடிமட்டம் வரை உள்ள ஆழத்தில் மிதவை இழுவலை வீசப்படுகிறது. வலையின் அளவுக்கு ஏற்றது போல் மீன்களை பிடிக்கலாம். பிடித்த மீன்களை உறிஞ்சியின் உதவியுடன் படகில் சேகரிப்பர். நடுக்கடலில் செல்லும்போது இழு பலகைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். வலையின் நீலம் 1/2 மைல் தூரம், அகலம் 1/4 மைல் என இருந்தால் மீன்கள் அதிகளவு கிடைக்கும்.

சூழ் வலை

சூழ்வலை ஒருவகையான கடல் அடிமட்ட மீன் பிடிப்பு வலையாகும். இதில் காட் மீன், ஆழ்கடல் மீன் மற்றும் தட்டை மீன் இனங்கள் போன்ற மீன்களை பிடிக்கலாம். இந்த வலையைச் சுற்றிலும் கயிறு இருக்க நடுவில் வலையிருக்கும். ஒரு வலைப்பிடிப்பில் மீன்கள் அனைத்தும் பிடிப்படும். இது ஒரு எளிமையான மீன்பிடிபபு வலையாகும், மற்ற வலைகளை விட இந்த வலை மீன்பிடிப்பிக்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும் மற்றும் தரமுள்ள மீன்கள் கிடைக்கும்.

சுருக்குவலை

Lake Pátzcuaro butterfly fishermen, Michoacán, Mexico

சுற்றியுள்ள மீன் கூட்டங்களை பெரிய மீன் வலையினால் பிடித்து பிடித்த பின் மீன்கள் தப்பாமல் இருக்க வலையை சுருக்கிக் கொள்ளும் வகையில் அமைவது சுருக்குவலை ஆகும். இந்த வலையின் மூலம் அதிகளவு மீன்கள் பிடிக்கப்படும். சூரை மீன்கள், கானாங்கத்தி போன்ற வகையான மீன்கள் இதன் மூலம் பிடிக்கப்படுகின்றன.

ஓடு கயிறு வலை

கயிறு நுனியில் கொக்கி வைத்து மீன்களைக் கவருதல் ஓடு கயிறு வலையாகும். இந்த முறை மீன் பிடிப்பை பயன்படுத்தி அதிக தரமுள்ள மிதவை மீன்களை பிடிக்கலாம். (எ.கா) கெண்டை, உழி மற்றும் சால்மோன் மீன்கள்.

குத்தீட்டி

இந்த முறையான மீன்பிடிப்பு உயர்ந்த வகையான மீன்களை பிடிக்க உதவும். அதாவது சுவார்ட் மீன் மற்றும் சூரை மீன்கள். குத்தீட்டி குறிப்பிட்ட மீன் வளர்ப்பில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. முன்னதாகவே மீனின் அளவு, வயது என தெரிந்து அதன் பின் பிடிக்க வேண்டும்.

உசாத்துணை

  1. ராகுல் முரளிதரன் (2917 மார்ச் 25). "மீன்பிடி தொழில் பற்றி நமக்கு என்ன தெரியும்?". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 26 மார்ச் 2017.
  2. ஜோ டி குரூஸ் (2017 மார்ச் 30). "இரட்டைமடியையும் சுருக்குமடியையும் ஒன்றெனக் கருதுவது அறியாமை இல்லையா?". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 31 மார்ச் 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.