மீனாட்சி முகர்சி

மீனாட்சி முகர்சி (Meenakshi Mukherjee, இறப்பு: செப்டம்பர் 16, 2009) ஆங்கில இலக்கிய அறிஞர், புதின ஆசிரியர், பேராசிரியர் என அறியப்படுபவர் ஆவார். 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருதை இவர் பெற்றார். ஆர்.சி.தட் என்பவர் குறித்து வரலாற்று நூலை எழுதினார். இது தவிர பல புதினங்களும் கட்டுரைகளும் எழுதினார்.[1]

பணிகளும் பதவிகளும்

பாட்னா, தில்லி, புனே ஆகிய இடங்களில் கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்து ஆங்கில இலக்கியம் கற்பித்தார். பின்னர் ஐதராபாத் பல்கலைக்கழகத்திலும், பல ஆண்டுகளாக தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். 2001-2004 ஆண்டுகளில் காமன்வெல்த்து இலக்கியம் மொழி ஆய்வுகள் அமைப்பில் தலைவராக இருந்தார். 1993-2005 இல் இந்தியன் சாப்டர் அமைப்பின் தலைவர் ஆனார்.

மீனாட்சி முகர்சி டெக்சாசு பல்கலைக் கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், கன்பரா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைப் பேராசிரியராகவும் இருந்தார்.

இவருடைய கணவரான சுசித் முகர்சி என்பவரும் இலக்கியவாதி ஆவார். சுசித் முகர்சி ஒரியண்டு லாங்க்மன் என்னும் நிறுவனத்தில் பதிப்பாசிரியர் ஆவார். மீனாட்சி முகர்சி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாளில் காலமானார்.

சான்றாவணம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.