மீத்திமிசுத்தாரை

மீத்திமிசுத்தாரை (மீயொலிவேக எரிதல் திமிசுத்தாரை) (Scramjet) எனப்படுவது ஒருவகை திமிசுத்தாரை, காற்றெரி தாரைப் பொறியாகும்; இதில் எரிதல் மீயொலிவேகத்திலேயே நடைபெறுகிறது. திமிசுத்தாரைகளைப் போலவே, இவையும் அதிவேகத்தில் செல்லும்போதுதான் காற்றை அமுக்கு, எதிர்முடுக்கம் கொடுத்து எரித்து உந்துவிசையை ஏற்படுத்துகிறது; ஆனால் திமிசுத்தாரைகளில் காற்று, குறையொலிவேகத்துக்கு எதிர்முடுக்கம் செய்யப்படுகிறது - மீத்திமிசுத்தாரைகள் அந்தளவுக்கு காற்றை எதிர்முடுக்கம் செய்யாமல் மீயொலிவேகத்திலேயே எரித்தலை நிகழ்த்துகின்றன. இதன்மூலம் மீத்திமிசுத்தாரைகள், திமிசுத்தாரைகளைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் சிறப்பாகச் செயல்புரியக்கூடும்: கோட்பாட்டளவில் அவற்றின் அதிகபட்ச வேகம் மாக் 12 (9,100 mph; 15,000 km/h) முதல் மாக் 24 (18,000 mph; 29,000 km/h) எனுமளவில் இருக்கும்.

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.