மின்னணு போர்

போர்கள் இன்றைய காலங்களில், கப்பல்கள், வானூர்திகள் மற்றும் தரைப்படைகளால் நிகழ்த்தபடுகிறது. மிக முக்கியமாக, ஒரு நாட்டின் வெற்றி என்பது அந்த நாட்டிடம் எதிரி நாட்டின் படையின் போர்கருவிகளை பற்றிய அறிவை சார்ந்தது. எதிரியின் போர்கருவிகளின் வலிமையை கொண்டு போர்புரியும் யுக்தி நிர்ணயிகப்படுகிறது. இதில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது மின்னணு போர் (Electronic Warfare) முறை. சொல்லபோனால் இது மின்னணு போர் ஆல்ல மாறாக இது மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை சார்ந்தது. எதிரி போர்கருவிகளின் மின்காந்த அலைகளை எப்படி நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறோமோ அதை பொருத்து போரில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கபடுகிறது. மின்னணு போர் முறையில் மின்சுற்று (Electronic Circuit) உபயோகபடுத்தபடுகிறது.[1] இந்த மின்காந்த அலைகளில் உள்ள தகவல்களை பயன்படுத்தி எதரிகளின் ஆயுதம் மற்றும் போர் கருவிகள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். மின்னணு போர் முரை பொதுவாக மூன்று வகைப்படும். 1. மின்னணு ஆதரவு நடவடிக்கை (ESM), 2. மின்னணு தாக்குதல் (ECM), 3. மின்னணு பாதுகாப்பு (ECCM).

மின்னணு ஆதரவு நடவடிக்கை (ESM):

மின்னணு ஆதரவு நடவடிக்கை என்பது மின்னணு போரின் ஒரு பகுதி. இந்த முறை எதிரியின் மின்காந்த அலைகள் தேட பட்டு, அதன் இடைமறிது, அதன் இருப்பிடத்தை அறிந்து, அந்த தகவலை பதிந்து மற்றும் அதனை பற்றி ஆராய்வதுமாகும். மினGi்னணு ஆதரவு நடவடிக்கை முலமாக பிற் சமயங்களில் தமது போர் கருவிகளை பாதுகாப்பது மட்டுமின்றி எத்ரிகளை தகவும் பயன்படுத்தபடுகிறது. இந்த தகவல்கள் மின்னணு புலனாய்வு (ELINT), தொடர்பு புலனாய்வு (COMINT) மற்றும் மின்னணு ஆதரவு நடவடிக்கை ரிசிவர் (ESM receiver) மூலம் பெறபடுகிறது.

Embraer E-99ஆரம்ப எச்சரிக்கை கட்டுப்பாடுகள் கொண்ட விமானம்

மின்னணு தாக்குதல் (ECM):

மின்னணு தாக்குதல் என்பது எத்ரிகளின் தாக்குதலின் வேகத்தை குறைபதோ அல்லது முற்றிலும் தடுப்பதோ ஆகும். இது எதிரியின் மின்காந்த அலைகள் பற்றி அறிந்து அதனை நமக்கு ஏற்றாற்போல் உபயோகபடுத்துவது ஆகும். இது இரு வகைகளில் செயல்படுகிறது.

நெருக்குதல் (Jamming):

எதிரியின் போர் கருவிகளின் மின்காந்த அலைகளை வேண்டுமென்ற இடைமரிபதோ இல்லையென்றால் தங்கள் பக்கம் இருந்து குழப்பமான மின்காந்த அலைகளை எதிரியின் பக்கமே செலுத்துவது போன்ற செயல்களால் எதிரியின் கருவிகளின் திறனை குறைப்பதை நெருக்குதல் என்கிறோம்.

ஏமாற்றுதல் (Deception): [2]

எதிரியின் போர் கருவிகளின் மின்காந்த அலைகளை வேண்டுமென்ற இடைமரிபதோ இல்லையென்றால் வரும் அலைகளை சிறிது மற்றம் செய்து திருப்பி அனுபவதோ இல்லையென்றால் தங்கள் பக்கம் இருந்து குழப்பமான மின்காந்த அலைகளை எதிரியின் பக்கம் செலுத்துவது போன்ற செயல்கள் மூலம் எதிரியின் கருவிகளை தவறாக வழிநடத்துவதை ஏமாற்றுதல் என்கிறோம். இது இரண்டு வகைப்படும்

சூழ்ச்சி (Manipulative):

மின்காந்த அலைகள் மற்றமோ அல்லது உருவகப்படுத்துதல் செய்து தனது தேவைகளை பூர்த்தி செய்வது சூழ்ச்சி ஆகும்.

சாயல் (Imitative):

எதிரியின் போர் கருவிகளின் மின்காந்த அலைகளுக்குள் மின்காந்த அலைகளை அறிமுகப்படுத்தி எதிரியை நம்பும்படி செய்வது சாயல் எனப்படும்.

மின்னணு பாதுகாப்பு (ECCM):

மின்னணு தாக்குதலால் ஏற்படும் விளைவுகள் தங்களை பாதிக்காமல் மின்காந்த அலைகளை தமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொண்டு பாதுகாப்பது மின்னணு பாதுகாப்பு ஆகும்.

மேற்கோள்கள்

  1. Mohinder Singh. Electronic Warfare,1988, Chapter 1.
  2. Mohinder Singh. Electronic Warfare,1988, Chapter 2.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.