மார்க் வா
மார்க் வா (ஆங்கிலம்: Mark Waugh, பிறப்பு ஜூன் 2, 1965), முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர், முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் ஸ்டீவ் வாவுடன் (Steve Waugh) இரட்டையராகப் பிறந்தவர், வலது கை ஆட்டக்காரரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4-ம் எண் வரிசையிலும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் களம் இறங்கியவர், பிரமாதமான ஸ்லிப் பீல்டரான இவர் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்த படியாக அதிகமாக 181 பிடிகளை எடுத்தவர்.
மார்க் வா | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
பிறப்பு | 2 சூன் 1965 | |||
கன்ரபரி, நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா | ||||
வகை | மட்டையாளர் | |||
துடுப்பாட்ட நடை | வலது கை | |||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதற்தேர்வு (cap 349) | 25 ஜனவரி, 1991: எ இங்கிலாந்து | |||
கடைசித் தேர்வு | 19 அக்டோபர், 2002: எ பாகிஸ்தான் | |||
முதல் ஒருநாள் போட்டி (cap 105) | 11 டிசம்பர், 1988: எ பாகிஸ்தான் | |||
கடைசி ஒருநாள் போட்டி | 3, 2002: எ தென்னாப்பிரிக்கா | |||
சட்டை இல. | 6 | |||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||
ஆண்டுகள் | அணி | |||
1985–2004 | நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா | |||
1988–2002 | எசெக்சு | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
தேர்வு | ஒநா | முத | பட்.A | |
ஆட்டங்கள் | 128 | 244 | 368 | 435 |
ஓட்டங்கள் | 8029 | 8500 | 26855 | 14663 |
துடுப்பாட்ட சராசரி | 41.81 | 39.35 | 52.04 | 39.10 |
100கள்/50கள் | 20/47 | 18/50 | 81/133 | 27/85 |
அதிக ஓட்டங்கள் | 153* | 173 | 229* | 173 |
பந்து வீச்சுகள் | 4853 | 3687 | 15808 | 6947 |
இலக்குகள் | 59 | 85 | 208 | 173 |
பந்துவீச்சு சராசரி | 41.16 | 34.56 | 40.98 | 33.42 |
சுற்றில் 5 இலக்குகள் | 1 | 1 | 3 | 1 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
சிறந்த பந்துவீச்சு | 5/40 | 5/24 | 6/68 | 5/24 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 181/– | 108/– | 452/– | 201/– |
ஆகத்து 19, 2007 தரவுப்படி மூலம்: cricketarchive.com |
ஆரம்பகால வாழ்க்கை
மார்க் வா, நியூ சவுத் வேல்ஸிலுள்ள கேம்ப்சியின் காண்டெர்ப்யூரி மருத்துவமனையில் 1965 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அன்று பிறந்தார். இவர் ரோட்கெர் மற்றும் பெவர்லி வா இரட்டையருக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒருவராவார். இவரது தந்தை வங்கி அதிகாரி, தாயார் நியூ சவுத் வேல்ஸ் கல்வித் துறையில் ஆசிரியராக இருந்தார்.[1] அவரது குடும்பம் மேற்கு சிட்னியின் புறநகரான பனானியாவில் குடியமர்ந்தது.[2] இரட்டையர்களுக்கு மேலும் இரு சகோதரர்கள் டீன் மற்றும் டானி பிறந்தனர்.[3] துவக்கக்காலத்திலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தினர்.[4][5] ஆறு வயதை அடைந்தபோது இரட்டையர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட காற்பந்தாட்டம் (சாக்கர்), டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை விளையாடினர். அவர்களின் முதல் கிரிக்கெட் போட்டியில், சகோதரர்கள் இருவரும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தனர்.[6]
இவர்கள் குடும்பத்தில் பலர் ஏற்கனவே விளையாட்டு வீரர்களாய் இருந்தனர். இவர்களது தந்தை வழிப் பாட்டனாரான எட்வர்ட் ஓட்டப்பந்தய நாய் பயிற்சியாளராக இருந்தவர். வடக்கு கடற்கரை நகரான பங்காலோவில் வளர்ந்த எட்வர்ட், ரக்பி லீக் போட்டிக்கு நியூ சவுத் வேல்ஸ் கண்ட்ரி அணிக்காகக் தேர்வு செய்யப்பட்டார்.[7] ஆனால் நியூ சவுத் வேல்ஸ் ரக்பி லீக்கின் ஈஸ்டர்ன் சபர்ப்ஸ் அணியில் இணையும் சமயத்தில் குடும்ப காரணங்களுக்காக அவரது தொழில் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.[4] எட்வர்ட்சின் ஒரே மகன் ரோட்கெர், உறுதியளிக்கும் டென்னிஸ் ஆட்டக்காரர். அவர் ஆஸ்திரேலியாவின், இளநிலை- தரவரிசையில் எட்டாவதாகவும் 14 வயதிற்கு கீழான நிலையில் மாகாண சாம்பியனாகவும் இருந்தார்.[4] தாய்வழியைச் சேர்ந்த பெவ், டென்னிஸ் விளையாட்டில் 14 வயதிற்கு கீழான தென் ஆஸ்திரேலியன் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர். பெவ்வின் மூத்த சகோதரர் டியோன் பர்னே ஒரு துவக்க ஆட்டக்காரராக சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் பாங்ஸ்டவுன்னிற்காக விளையாடியவர். இப்பொழுதும் அக்குழுமத்தின் வரலாற்றில் முன்னணி ஓட்ட எண்ணிக்கையாளராக அவர் நிலைபெற்றிருக்கிறார்.[4]
எட்டு வயதில் பாங்க்ஸ்டவுன் மாவட்டத்தின் பத்து வயதிற்கு கீழான அணிக்கு தேர்வு செய்யப்பட்டதுதான் இரட்டையர்களின் முதல் நுழைவு ஆகும்.[8] 1976 ஆம் ஆண்டில், இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்சின் துவக்கப்பள்ளி காற்பந்தாட்ட (சாக்கர்) அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்த அணியின் வரலாற்றிலேயே, அணியில் பங்குபெற்ற மிகவும் இளம் வயதினராக இருந்தனர். தாங்கள் படித்துக் கொண்டிருந்த பனானியா துவக்கப் பள்ளிக்காக விளையாடி, தங்கள் பள்ளிக்கு உம்ப்ரோ பன்னாட்டுக் கேடயத்தை பெற்றுத் தந்தனர். அந்த மாநிலம் தழுவிய நாக்-அவுட் கால்பந்து (சாக்கர்) போட்டியின் இறுதியாட்டத்தில் அணியின் அனைத்து மூன்று கோல்களையும் இட்டனர்.[9] அவர்கள் பள்ளி தொடர்ச்சியாக மூன்றுமுறை மாநில கிரிக்கெட் சாம்பியன் பட்டம் பெற்றதற்கும் பள்ளி இறுதி ஆண்டில் பள்ளியின் டென்னிஸ் அணி மாநில அளவில் இரண்டாவதாக வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக இருந்தனர்.[9][10] பள்ளி இறுதி ஆண்டில் மார்க் வா, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் அணித் தலைவனாக இருந்து இரண்டிலும் தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களைப் பள்ளிக்குப் பெற்றுத் தந்தார்.[5][10]
மேற்கோள்கள்
- Knight 2003, pp. 4–5
- Knight 2003, p. 6
- Knight 2003, pp. 9, 13
- Knight, p. 8.
- Perry 2000, p. 348
- Knight 2003, p. 11
- Knight, p. 7.
- Knight, p. 12.
- Knight, p. 14.
- Knight, p. 15.