மார்கரிதா ஏக்
மார்கரிதா ஏக் (Margherita Hack), இத்தாலியக் குடியரசின் தகைமை ஆணை (இத்தாலிய மொழி:marɡeˈriːta ˈ(h)akk; 12 ஜூன் 1922 – 29 ஜூன் 2013) ஓர் இத்தாலிய வானியலாளரும் மக்கள் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1995 இல் கண்டுபிடித்த சிறுகோள் 8558 ஏக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
மார்கரிதா ஏக் Margherita Hack | |
---|---|
![]() மார்கரிதா ஏக், 2006 | |
பிறப்பு | சூன் 12, 1922 புளோரன்சு, தசுக்கனி, இத்தாலி |
இறப்பு | 29 சூன் 2013 91) திரியெசுத்தே, பிரியூலி வெனிசா கியூலியா, இத்தாலி | (அகவை
வாழிடம் | இத்தாலி |
தேசியம் | இத்தாலியர் |
துறை | வானியற்பியல் மக்கள் அறிவியல் எழுத்தாளர் |
பணியிடங்கள் | திரியெசுத்தே பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | புளோரன்சு பல்கலைக்கழகம் |
விருதுகள் | தார்கா கியூசெப்பே பியாசி (Targa Giuseppe Piazzi) (1994) பிரிமியோ இண்டர்னேழ்சனேல் கார்த்தினா யுலிசே (Premio Internazionale Cortina Ulisse) (1995) |
வாழ்க்கை
இவர் சுவீடனைச் சேர்ந்த கணக்குவைப்பாளரும் சீர்திருத்தக் கிறித்தவரும் ஆகிய இராபெர்த்தோ ஏக் மகளாக புளோரன்சில் பிறந்தார். இவரது தாயார் மரியா உலூயிசா பொகேசி தசுக்கனியைச் சேர்ந்தவரும் கத்தோலிக்கரும் ஆவார். பொகேசி பிரான்சு பெல்லி கலைக் கல்விக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் இவர் உப்பிழி கலையரங்கில் நுண்பட ஓவியரும் ஆவார்.
இவரது பெற்றோர் இருவரும் தம் குடும்பச் சமய நெறியைத் துறந்துவிட்டு இத்தாலிய இறையியல் கழகத்தில் இணைந்தனர். இவர் இந்தக் கழகத்தில் சிலகாலம் செயலாளராக இருந்தார். இளவரசர் காம்பெரினி காவல்லினி இக்கழகத்தின் தலைவர் ஆவார்.[1][2]
தகைமை ஆணைகள்
![]() |
இத்தாலியக் குடியரசுத் தகைமை ஆணை 28 மே 2012 இல் தரப்பட்டது.[3] |
![]() |
இத்தாலியக் கலை, பண்பாட்டுத் தகைமை ஆணை 27 மே 1998 இல் தரப்பட்டது.[4] |
மேற்கோள்கள்
- Teosofia in Italia
- Lo sguardo dell’astrofisica Archived 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்.
- "Presidential Awards". Quirinal Palace. பார்த்த நாள் 29 June 2013.
- "Presidential Awards". Quirinal Palace. பார்த்த நாள் 30 June 2013.