மாரியானோ ரஜோய்

மாரியானோ ரஜோய் பிரேய் (Mariano Rajoy Brey, எசுப்பானிய ஒலிப்பு: [maˈɾjano raˈxoi̯]; பிறப்பு 27 மார்ச் 1955) எசுப்பானியத்தின் மக்கள் கட்சி (எசுப்பானியம்: Partido Popular )யைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் திசம்பர் 21, 2011 அன்று முதல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவரும் ஆவார்.[1] சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கலீசியாவில் பிறந்த ரஜோய், சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தமது 24வது அகவையிலேயே எசுப்பானியாவின் குடிசார் சேவைப் பணிக்கான நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று மிகச்சிறிய வயதில் பத்திரப் பதிவாளராக பணியாற்றினார்.

மாரியானோ ரஜோய்
எசுப்பானிய பிரதமர்
பதவியேற்பு
21 திசம்பர் 2011
அரசர் ஆறாம் பிலிப்பு
முன்னவர் ஜோசு லூயி ரோட்ரிகோசு சபடேரோ
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 April 2004
முன்னவர் ஜோசு லூயி ரோட்ரிகோசு சபடேரோ
பின்வந்தவர் ஆல்பிரெடோ பெரெசு ருபால்காபா (தெரிவு)
பிரெசிடென்சி அமைச்சர்
பதவியில்
9 சூலை 2002  3 செப்டம்பர் 2003
பிரதமர் யோசே மாரியா அசுனர்
முன்னவர் யுவான் ஓசே லூகாசு
பின்வந்தவர் யாவியர் அரெனாசு
பதவியில்
27 ஏப்ரல் 2000  27 பெப்ரவரி 2001
பிரதமர் யோசே மாரியா அசுனர்
முன்னவர் பிரான்சிஸ்கோ அல்வரெசு காசுகோசு
பின்வந்தவர் யுவான் ஓசே லூகாசு
உள்துறை அமைச்சர்
பதவியில்
27 பெப்ரவரி 2001  9 சூலை 2002
பிரதமர் ஓசே மாரியா அசுனர்
முன்னவர் ஜைம் மேயர் ஒரேயா
பின்வந்தவர் ஏஞ்செல் அசெபெசு
முதல் எசுப்பானிய துணைப் பிரதமர்
பதவியில்
27 ஏப்ரல் 2000  3 செப்டம்பர் 2003
பிரதமர் ஓசே மாரியா அசுனர்
முன்னவர் பிரான்சிஸ்கோ அல்வேரசு காசுகோசு
பின்வந்தவர் ரோட்ரிகோ ராதோ
கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சர்
பதவியில்
20 சனவரி 1999  27 ஏப்ரல் 2000
பிரதமர் ஓசே மாரியா அசுனர்
முன்னவர் எசுபெரன்சா அகுய்ர்
பின்வந்தவர் பிலர் டெல் காஸ்டிலோ (கல்வி, பண்பாடு மற்றும் விளையாட்டு)
பொதுநிர்வாக அமைச்சர்
பதவியில்
4 மே 1996  20 சனவரி 1999
பிரதமர் ஓசே மாரியா அசுனர்
முன்னவர் யோன் லெர்மா
பின்வந்தவர் ஏஞ்செல் அசெபெசு
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 மார்ச் 2004
தொகுதி மாட்ரிட்
பதவியில்
22 சூன் 1986  14 மார்ச் 2004
தொகுதி பொன்டெவெத்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு மாரியானோ ரஜோய் பிரேய்
மார்ச்சு 27, 1955 (1955-03-27)
சாந்தியாகோ தே கோம்போசுதேலா, பிரெஞ்சு எசுப்பானியா
அரசியல் கட்சி மக்கள் கட்சி (1989–நடப்பு)
பிற அரசியல்
சார்புகள்
மக்கள் கூட்டணி (1989 முன்பு)
வாழ்க்கை துணைவர்(கள்) எல்விரா ஃபெர்னாண்டசு பால்போயா(1996–இன்றுவரை)
பிள்ளைகள் மாரியானோ, யுவான்
படித்த கல்வி நிறுவனங்கள் சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகம்
தொழில் பத்திரப் பதிவாளர்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
இணையம் கட்சி இணையதளம்

ஹோயே மாரியா அசுனார் அமைச்சரவையில் பல அமைச்சுப்பதவிகளில் பணியாற்றியுள்ள ரஜோய் 2004 எசுப்பானியத் தேர்தல்களில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த மாட்ரிட் தொடர்வண்டி குண்டுவெடிப்புகளின் பின்னணனியில் அந்தத் தேர்தலில் எதிர்கட்சியாக விளங்கிய எசுப்பானிய சோசலிச தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.