எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு

பிலிப்பு VI (Felipe VI, எசுப்பானிய ஒலிப்பு: [feˈlipe], பெயரிடலின்போது: பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா ; பிறப்பு 30 சனவரி 1968) எசுப்பானிய அரசராவார். அரச வாரிசாக இருந்த போது பிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.

பிலிப்பு VI
2014 இல் ஆறாம் பிலிப்பு
எசுப்பானிய அரசர்
ஆட்சியில் 19 சூன் 2014 - பொறுப்பில்
முடிசூடல் 19 சூன் 2014
முன்னையவர் முதலாம் வான் கார்லோஸ்
அரச வாரிசு லியோநார், அசுத்துரியாசின் இளவரசர்
எசுப்பானியப் பிரதமர் மாரியானோ ரஜோய்
வாழ்க்கைத் துணை லெடிசியா
( தி . 2004)
வாரிசு
லியோநார், அசுத்துரியாசின் இளவரசர்
இன்ஃபான்டா சோஃபியா
முழுப்பெயர்
பிலிப்பு வான் பாப்லோ அல்பான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு
குடும்பம் பூர்போன் மாளிகை [1]
தந்தை முதலாம் வான் கார்லோஸ்
தாய் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் சோஃபியா
பிறப்பு 30 சனவரி 1968 (1968-01-30)
மத்ரித், எசுப்பானியா
கையொப்பம்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

இவர் எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார்.

சூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிலிப்பு, சூன் 19, 2014 அன்று பிலிப்பு VI என்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.[2][3][4]

மேற்கோள்கள்

  1. "பூர்போன் மாளிகை". மூல முகவரியிலிருந்து 18 பிப்ரவரி 2011 அன்று பரணிடப்பட்டது.
  2. "பிலிப்பு எசுப்பானியாவின் அரசராகிறார்". பிபிசி. 18 சூன் 2014. http://www.bbc.co.uk/news/world-europe-27916036. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2014.
  3. கோவன், பியோனா (13 சூன் 2014). "எசுப்பானியாவிற்கு இனி இரண்டு அரசர் மற்றும் அரசிகள்". தி டெலக்ராப். பார்த்த நாள் 9 அக்டோபர் 2014.
  4. "பெலிப்பு VI முடிசூடல்". எல் பெய்சு (3 சூன் 2014). பார்த்த நாள் 9 அக்டோபர் 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.