குளிர்கால அரண்மனை

குளிர்கால அரண்மனை (Winter Palace, ரஷ்ய மொழி: Зимний дворец, சீம்னிய் துவரியெத்ஸ்), ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் 1755 - 1762 காலப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஆகும். இது இத்தாலியக் கட்டிடக்கலை நிபுணரான பிரான்செஸ்கோ பார்த்தலோமியோ ரஸ்ட்ரெலி என்பவரால் ரஷ்ய சார் மன்னர்கள் குளிர்காலங்களில் தங்குவதற்காகக் கட்டப்பட்டது.

அரண்மனைச் சதுக்கத்தில் இருந்து குளிர்கால அரண்மனையின் தோற்றம்
நெவா ஆற்றிற்குக் குறுக்கே அரண்மனையின் இரவுநேரத் தோற்றம்

1837 ஆம் ஆண்டு டிசம்பர் 1 இல் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் இவ்வரண்மனையின் பெரும் பகுதி சேதமடைந்தது. இது பின்னர் முதலாம் நிக்கலாஸ் மன்னனால் மீள அமைக்கப்பட்டது. 1917 இல் இடம்பெற்ற பெப்ரவரிப் புரட்சியை அடுத்து இங்கு இடைக்கால அரசாங்கம் இயங்கி வந்தது. அதே ஆண்டு அக்டோபர் 25 இல் (அக்டோபர் புரட்சி) இது பொல்ஷெவிக்குகளால் கைப்பற்றப்பட்டு, எர்மித்தாஷ் அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் 1,057 அறைகளும் பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.