மாயா சமயம்
வேளாண்மை தொழிலை நம்பியிருந்த மாயர்கள் மழையையும், சூரியனையும் முக்கிய தெய்வங்களாக வழிபட்டனர்.[1]
![]() |
மாயா நாகரிகம் |
---|
மக்கள் · மொழிகள் · சமூகம் |
சமயம் · தொன்மவியல் · பலி |
நகரங்கள் · கட்டிடக்கலை · காலக்கணக்கு முறை |
நினைவுக்கல் · புடவைகள் · வணிகம் |
கொலம்பசுக்கு முந்திய இசை · எழுத்துமுறை |
வரலாறு |
முன்செந்நெறிக்கால மாயா |
செந்நெறிக்கால மாயா வீழ்ச்சி |
யுக்கட்டானை எசுப்பானியா கைப்பற்றல் |
சூரியக் கடவுள்
கினிசாசௌ என்ற சூரியக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். ஒருபுறம் இறகு முழைத்த பாம்பும், மற்றொரு புறத்தில் வேதாளமும், அவற்றின் குறுக்காக ஒரு சிலுவையும் உடைய உருவமே சூரியனைக் குறிக்கும் சிலையாக இருந்தது.
மழைக் கடவுள்
சாக்சு என்ற மழைக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். அவருடைய பையிலிருந்து மழை சிந்துகிறது என்றும், இடியும், புயலும், மின்னல் அப்பையில் இருந்தே உருவாகின்றன என்று நம்பி வந்தனர்.
நரகம்
மாயர்கள் மெட்னசு என்ற இருண்ட நரகம் ஒன்று இருப்பதாகவும், கூனிகா என்ற கடவுள் தவறுக்கு ஏற்ப தண்டனை கொடுப்பதாகவும் நம்பினர்.
பாம்புக் கடவுள்
குல் குல் கான் என்ற பம்புக் கடவுளை மாயர்கள் வழிபட்டனர். சிட்சன் இட்காவில் உள்ள இரண்டு கோயில்களுள் இற்கு வைத்த பாம்பிற்கான கோயின் ஒன்றும் உள்ளது.
மேற்கோள்
- நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.