மானுவல் எல். குவிசோன்

மானுவல் லூயி குவிசோன் யி மோலினா (Manuel Luis Quezón y Molina, ஆகத்து 19, 1878 – ஆகத்து 1, 1944) 1935 முதல் 1944 வரை பிலிப்பீன்சு பொதுநலவாயத்தின் அரசுத்தலைவராக பொறுப்பேற்றவர். பிலிப்பீன்சின் அரசுத் தலைவராக பணியாற்றிய முதல் பிலிப்பினோ இவராவார். பெரும்பான்மையான பிலிப்பினோ மக்கள் இவரை 1897 முதல் 1901 வரை ஆட்சி புரிந்த எமிலியோ அகுனால்டோவிற்குப் பிறகான இரண்டாவது அரசுத் தலைவராக கருதுகின்றனர்.

மானுவல் எல். குவிசோன்
பிலிப்பீன்சின் இரண்டாம் அரசுத்தலைவர்
பொதுநலவாயத்தின் முதல் அரசுத்தலைவர்
பதவியில்
நவம்பர் 15, 1935  ஆகத்து 1, 1944
துணை குடியரசுத் தலைவர் செர்ஜியோ ஓசுமெனா
முன்னவர் கலைக்கப்பட்டது (இப்பதவியில் கடைசியாக எமிலியோ அகுனால்டோ இருந்தார்)
பின்வந்தவர் ஒசே பி. இலாரல் (நிகழ்நிலைப்படி)
பிலிப்பீன்சு மேலவையின் முதல் தலைவர்
பதவியில்
ஆகத்து 29, 1916  நவம்பர் 15, 1935
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
பின்வந்தவர் மானுவல் இரோக்சாசு
ஐந்தாவது மேலவை மாவட்ட உறுப்பினர்
பதவியில்
அக்டோபர் 16, 1916  நவம்பர் 15, 1935
இவர்களுடன்:
வின்சென்ட் இலஸ்தர் (1916–1919)
அன்டெரோ சோரியனொ (1919–1925)
ஒசே பி. இலாரெல் (1925–1931)
கார்லோ எம். ரெக்டோ (1931–1935)
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
பின்வந்தவர் பதவி கலைக்கப்பட்டது
தேசிய பாதுகாப்புச் செயலர்
பதவியில்
சூலை 16, 1941  திசம்பர் 10, 1941
குடியரசுத் தலைவர் அவரே
முன்னவர் தியோபிலோ சீசன்
பின்வந்தவர் ஜார்ஜ் பி. வர்காசு
பிலிப்பீன்சு தீவுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்க உள்ளுறை ஆணையர்
பதவியில்
நவம்பர் 23, 1909  அக்டோபர் 15, 1916
உடன் பணியாற்றுபவர் பெனிட்டோ லகார்தா
(1909–1913)
மற்றும் மானுவல் எர்ன்ஷா
(1913–1916)
முன்னவர் பப்லோ ஓகேம்போ
பின்வந்தவர் தியோடொரோ ஆர். யாங்கோ
பிலிப்பீன்சு கீழவையில் பெரும்பான்மைத் தலைவர்
பதவியில்
அக்டோபர் 16, 1907  நவம்பர் 23, 1909
முதல் பிலிப்பீன்சு சட்டப்பேரவையின் பெரும்பான்மைத் தலைவராக
குவிசோன் மாவட்டத்திலிருந்து கீழவை உறுப்பினர்
பதவியில்
அக்டோபர் 16, 1907  அக்டோபர் 16, 1916
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
பின்வந்தவர் பிலெமோன் பெரெசு
தயபாசு ஆளுநர்
பதவியில்
1906–1907
தனிநபர் தகவல்
பிறப்பு மானுவல் லூயி குவிசோன் யி மோலினா
ஆகத்து 19, 1878(1878-08-19)
பாலேர், தயபாசு, எசுப்பானியக் கிழக்கிந்தியத் தீவுகள்
(தற்போது பாலேர், அவுரோரா மாநிலம், பிலிப்பீன்சு)
இறப்பு ஆகத்து 1, 1944(1944-08-01) (அகவை 65)
சாரானாக் ஏரி, நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
அடக்க இடம் குவிசோன் நினைவு வட்டம், குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
தேசியம் பிலிப்பினோ
அரசியல் கட்சி நேசியோனலிசுட்டா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அவுரோரா அரகோன்
பிள்ளைகள் மா. அவுரோரா குவிசோன்
மாரியா செனீதா குவிசோன்-அவன்செனா
மானுவல் எல். குவிசோன், இளை.
லூயிசா கோரசோன் பாசு குவிசோன்
படித்த கல்வி நிறுவனங்கள் காலேஜியோ டெ சான் யுவான் டெ லெட்ரான்
சான்டோ டோமசு பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர், படைவீரர்
சமயம் உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  பிலிப்பீன்சு
கிளை பிலிப்பைன்சு புரட்சிகரப் படை
பிலிப்பைன்சு பொதுநலவாயப் படை
பணி ஆண்டுகள் 18991900
19411944
தர வரிசை மேஜர்
சமர்கள்/போர்கள் பிலிப்பைன்-அமெரிக்கப் போர்
இரண்டாம் உலகப் போர்
* Philippines Campaign (1941–1942)
* Japanese Occupation of the Philippines (1942-1945)

குவிசோன் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேலவைத் தலைவராவார். தவிரவும் நாடுதழுவிய தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத் தலைவராகவும் இரண்டாம் முறையும் மீள்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவராகவும் விளங்கினார். இவர் " தேசிய மொழியின் தந்தை" என அறியப்படுகின்றார்.

தனது ஆட்சிக்காலத்தில், குவிசோன் நாட்டுப்புற நிலமில்லா விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். தீவுகளின் படைசார் பாதுகாப்பு சீரமைப்பு, அரசு நிர்வாகச் சீரமைப்பு, மின்டானோ குடியேற்றம் மற்றும் மேம்படுத்தல், பிலிப்பீன்சின் வணிகத்தில் வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்கொள்ளல், நிலச் சீர்திருத்தம், அரசு ஊழலுக்கெதிரான நடவடிக்கைகள் என பல முடிவுகளைக் கண்டார். போர் தொடங்கியபோது ஐக்கிய அமெரிக்காவிலிருந்து நாடுகடந்த அரசை நிறுவி சப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தார்.

அமெரிக்காவில் நாடுகடந்து வாழ்ந்துவந்த நிலையிலேயே நியூயோர்க் மாநிலத்தின் சரனாக் ஏரி நகரில் காசநோயால் இறந்தார். இரண்டாம் உலகப் போர் முடியும்வரை இவரது உடல் ஆர்லிங்டன் தேசியக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது; பின்னர் மணிலாவிற்கு மாற்றப்பட்டது. இறுதியாக குவிசோன் நினைவு வட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.