மாநிலங்கள் (சப்பான்)

சப்பானின் உள்ளாட்சி 47 மாநிலங்கள் டொதோஃபுகென் (சப்பானிய மொழி:都道府県|都道府県, [[ஆங்கிலம்:prefecture) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஓர் நகரம், ஊர்கள் மற்றும் சிற்றூர்களை விடப் பெரியன.

  • டோக்கியோ நகரம் மட்டுமே ஓர் மாநிலமாக உள்ளது. இது "டோ" (都 to) என்று அழைக்கப்படுகிறது.
  • மற்றொரு சிறப்புத் தொகுதியாக ஒக்கைடோ உள்ளது. இது "டொ" ((道 ) என்று அழைக்கப்படுகிறது.
  • இரு நகரிய மாநிலங்கள் ஒசாகா மற்றும் குயோட்டோ மாநிலங்கள் "ஃபூ" (府 fu) என்றழைக்கப்படுகின்றன.
  • இவை தவிர்த்த ஏனைய 43 மாநிலங்களும் "கென்" (県 ken) என்றழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுனர் "சிஜி "governor (知事 chiji?) நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். சட்டங்களும் நிதிநிலை அறிக்கைகளும் ஒரே அவையுள்ள சட்டப்பேரவையால்assembly (議会 gikai?) ஆக்கப்படுகின்றன. இதன் உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகாலம் பதவியில் உள்ளனர்.

தற்போதுள்ள உள்ளாட்சி சட்டத்தின்படி மாநிலங்கள் மேலும் நகரங்கள் (市 shi) மற்றும் மாவட்டங்கள் (郡 gun) ஆகப் பிரிவுபடுத்தப்பட்டுள்ளன .ஒவ்வொரு மாவட்டமும் ஊர்கள் (町 chō அல்லது machi) சிற்றூர்கள் (村 son அல்லது mura) என பிரிக்கப்பட்டுள்ளன.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.