மாத்தளை சோமு

மாத்தளை சோமு சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியவர். இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடிய தமிழ் இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன.

மாத்தளை சோமு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வெளியான நூல்கள்

  • தோட்டக் காட்டினிலே (மூவர் சிறுகதை)
  • நமக்கென்றொரு பூமி (சிறுகதைத் தொகுதி)
  • இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள்
  • அவன் ஒருவனல்ல (சிறுகதை)
  • அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் (புதினம், இலங்கை சாகித்திய விருது 1991)
  • எல்லை தாண்டா அகதிகள் (புதினம், இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது 1994)
  • அவர்களின் தேசம் (சிறுகதை, தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு 1995)'
  • மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள் (தொகுப்பாசிரியர்)
  • அவள் வாழத்தான் போகிறாள் (புதினம்)
  • மூலஸ்தானம் (புதினம், இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது 1998)
  • நான்காவது உலகம் (குறும்புதினம்)
  • கறுப்பு அன்னங்கள் (சிறுகதை)
  • மாத்தளை முதல் மலேசியா வரை (பயணக்கதை)
  • லண்டன் முதல் கனடா வரை (பயணக்கதை)
  • புலம் பெயர்ந்த தமிழும் தமிழரும் (2013)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.