மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்

மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயில்.

மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்

அமைவிடம்

மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. [1] திருமாலுக்குரிய கோயில் கண்திறந்த பெருமாள் கோயில் எனப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தேசிய நெடுஞ்சாலை 67) , துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. [2]

இறைவன், இறைவி

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்டபெருமாள், தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.

சிறப்பு

சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை உள்ளது. [2] இக்கோயில் ஒரு குடவரைக்கோயிலாகும். மலையைக் குடைந்து சுவரிலேயே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் மூலமாக கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. [2] சற்றொப்ப புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் இருப்பதைப் போலவே இங்குள்ள பெருமாள் காணப்படுகிறார்.

மேற்கோள்கள்

  1. Dr.J.Raja Mohamad, Art of Pudukottai (Art and Architecture), Historical Arcives Committee,Pudukottai, 2003
  2. புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.