மரோசரித்ரா
மரோசரித்ரா 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது தெலுங்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தி மொழியில் ஏக் தூஜே கே லியே என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.
மரோசரித்ரா | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலசந்தர் |
தயாரிப்பு | ராமா அரங்கன்னல் |
கதை | கே. பாலசந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் சரிதா மாதவி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோக்நாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
விநியோகம் | ஆண்டாள் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 02 மே 1978 |
ஓட்டம் | 169 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
இந்த திரைப்படமானது மலையாள மொழியில் திரக்கள் எழுதிய கவிதா எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.
இந்த திரைப்படம் அதிகபட்சமாக 700 நாட்கள் வரை ஓடியது.[1] இயக்குனர் பாலசந்தர் அவர்கள் இந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது வென்றார். சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் 100 சிறந்த திரைப்படத்தின் பட்டியலில் இந்த திரைப்படமும் இடம்பெற்றது.
நடிகர்கள்
மேற்கோள்கள்
- "அழியாத கோலங்கள்" (in ta). குங்குமம். 18 May 2015. http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=8724&id1=6&issue=20150518.