மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (Mannar Thirumalai Naicker College) தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தால் 1974 ஆம் ஆண்டு மதுரை பசுமலையில் தொடங்கப்பட்டது. இங்கு கலை மற்றும் அறிவியல் சம்பந்தமான பல துறைகள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னர், திருமலை நாயக்கர் பெயரால் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியின் குறிக்கோள் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி | |
---|---|
நிறுவல்: | 1974 |
வகை: | தன்னாட்சி |
இளநிலை மாணவர்: | 7 பாடதிட்டங்கள் |
முதுநிலை மாணவர்: | 2 பாடதிட்டங்கள் |
அமைவிடம்: | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
சார்பு: | NAAC A [1] |
இணையத்தளம்: | www.mannarcollege.ac.in |
வரலாறு
தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வராக இருந்த திரு. கலைஞர் கருணாநிதி அவர்களால் 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரியின் கட்டிடம் காவலர் திரு. G.K. தேவராஜு நாயுடுகாரு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. கல்லூரி அப்போது சென்னாய் நகரில் உள்ள திரு. இராம விலாஸ் மண்டபத்தில் செயல்பட்டது பின்னர் தற்போது உள்ள நிரந்தர கட்டிடத்திற்கு 1979 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கியது.
1982-1983 ஆம் ஆண்டு வாக்கில் இரு பாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போதைய தமிழகச் சட்டபேரவையின் உறுப்பினரும் மற்றும் முன்னாள் அமைச்சருமான திரு. க. இராஜாராம் அவர்களின் முயற்சியால் மத்திய அரசு கல்லூரி விரிவாக்கம் செய்ய 24 ஏக்கர் நிலமும், மாநில அரசு 8 ஏக்கர் நிலமும் கொடுத்துவியது.
கல்லூரி வளாகத்தில் தற்போதுள்ள மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவச்சிலை பெரியகுளம் திரு. V. நாகராஜ் நாயுடு அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் காலம்சென்ற லயன் சுந்தரராஜன் அவர்களால் மிக குறுகிய காலத்தில் சுமார் 1 இலட்சம் சதுர பரப்பளவு கொண்ட கட்டிடம் உருவாக்கப்பட்டது.
தற்போதைய செயலர் திரு. எம். விஜயராகவன் அவர்களின் முயற்சியால் 13,000 சதுர பரப்பளவு கொண்ட நூலகக் கட்டிடம் உருவாக்கப்பட்டது.
துறைகள்
- வரலாறு
- கணிதம்
- அறிவியல்
- பொருளாதாரம்
- தமிழ்
- கணிப்பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
வெளி இணைப்புகள்
மேற்கோள்
- "Accreditation-Universities and Colleges". NAAC (05 January 2013). பார்த்த நாள் 05 January 2013.