மனிதனும் தெய்வமாகலாம் (நூல்)

மனிதனும் தெய்வமாகலாம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் எழுதப்பட்ட 33 கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள் தேவியின் பெண்மணி என்னும் இதழில் தொடராக வெளிவந்தவை. கட்டுரைகளுக்குப் பொருத்தமாக அவ்விதழில் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் இந்நூலில் பயன்படுத்தப்பட்டு இருப்பது இந்நூலின் சிறப்பாகும். இந்நூல் மூன்று பிரிவாக உள்ளது. உணர்ச்சி வசப்படும் மனிதன் விலங்கு. அவன் தன்னை வென்றால் தெய்வம் என்று இலக்கிய இதிகாசங்களை மையப்படுத்தி முன்பகுதி அமைந்துள்ளது. அடுத்து பகவத் கீதை கூறும், மனிதன் தெய்வமாகும் இரகசியங்களை அடையாளம் காட்டி உள்ளேன். தெய்வ சம்பத் எவை! அசுர சம்பத் எவை என்கிற கீதையின் கோட்பாட்டை மையப்படுத்தி மனிதன் தெய்வமாக முடியும் என்று புலப்படுத்தி இரண்டாம் பகுதி அமைந்துள்ளது. மூன்றாவது பிரிவில் யோக சாத்திரங்களில் கூறப்படும்குண்டலினி, துரியம் எய்தும்போது மனிதன் கடவுளாகிறான் என்பதை மிகமிக எளிமையாக, விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்பட்டு உள்ளது.

மனிதனும் தெய்வமாகலாம்
நூல் பெயர்:மனிதனும் தெய்வமாகலாம்
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:கட்டுரைகள்
துறை:சமயம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:கவிதா வெளியீடு,
8 மாசிலாமணி தெரு,
செளந்தரபாண்டியனார் அங்காடி,
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 2002
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

உள்ளடக்கம்

  1. என்னுரை

பகுதி 1: இலக்கிய இதிகாசங்களின் பாதையில் மனிதனும் தெய்வமாகலாம்

  1. மனிதனும் தெய்வமாகலாம்
  2. நேற்று வரை நீ மனிதன்; இன்று முதல் நீ புனிதன்
  3. யார் தேவர்? யார் அசுரர்?
  4. ஆபத்து இல்லாத அளவுகோல்கள்
  5. மனம் என்னும் குரங்கு
  6. சிலையும் நான்; சிற்பியும் நான்
  7. நரக அசுரனும் சொர்க்க தேவனும்
  8. இறந்த காலத்தில் விலங்கு; எதிர்காலத்தில் தெய்வம்
  9. தேவ தூதனும் பாவ தூதனும்
  10. கட்டுப்பாடு என்பது கடவுளின் பாஷை!
  11. மனித மனமா? யுத்த களமா?

பகுதி 2: கீதையின் பாதையில் மனிதனும் தெய்வமாகலாம்

  1. அச்சம் இன்மையே அமரத் தன்மை
  2. இறைநிலைக்கான இரண்டாவது படி!
  3. ஞானமும் தானமும்
  4. வாத்து மடையர்களும் ஞான அன்னங்களும்
  5. பாவம் நீக்கும் தேவகுணங்கள்
  6. கோபம் கொடுத்த பாவம்
  7. அங்குசம் ஒன்று யானைகள் ஐந்து
  8. உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும்
  9. அமைதி, பொறுமை, ஆனந்தம்!
  10. ஆன்மீக அசுரர்கள்
  11. சுகம்… சுகம் இல்லை சோகம்! சோகம்!
  12. மன்னிப்போம் மறப்போம்!
  13. பொம்மையா…? உண்மையா…?
  14. பெறுப்பற்ற விலங்குகள்! பொறுப்பேற்ற தெய்வங்கள்!
  15. விஞ்ஞானம் விளக்கும் விலங்கு மனிதர்கள்

பகுதி 3: யோக நெறியில் மனிதனும் தெய்வமாகலாம்

  1. ஓரறிவு முதல் ஆறறிவு வரை
  2. ஏழு பிறவியும் ஒரு துறவியும்
  3. ஆறாதாரம் - மூலாதாரம்
  4. தின்னப் பிறந்தவர்கள்
  5. நான் நான் என்று ஏன் மார்தட்டுகிறோம்
  6. மனிதனின் விழிப்புநிலை…!
  7. கடவுள்நிலையின் கடைசிப் படி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.