சமய சார்பின்மை

சமயத்தை அல்லது கடவுளை முதன்மைப் படுத்தப்படாமையை சமயசார்பின்மை (secularism) அல்லது சமய சார்பின்மை எனப்படுகின்றது.

வரலாறு

ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கம் அரசாங்கத்தில் கோலோச்சிய காலத்தில் அரசை மதப்பிடியிலிருந்து மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்த போது , Secularism என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் .[1]

அரசியல் கொள்கையாக இருக்கிறது

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்பு இந்தப் போக்கு வலுப்பெற்றிருக்கிறது. அனேக மேற்குநாடுகள், இந்தியா, சீனா, உருசியா உட்பட பல்வேறு நாடுகளில் இது ஒரு அரசியல் கொள்கையாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகள், இலங்கை ஆகியவை இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

கல்வியில் சமயம்

சமயத்தை திணிப்பதை, அல்லது பொது செயற்பாடுகளில் புகுத்துவதை சமயசார்பின்மை எதிர்க்கிறது. எடுத்துக்காட்டாக கல்வியில் ஒரு சமயத்தை முதன்மைப்படுத்துவதை இது ஏற்றுக்கொள்ளவில்லை.

சமய சார்புள்ள அல்ல சமய கட்டுப்பாடுள்ள Shria Law போன்ற சட்டங்களையும் சமயசார்பின்மை எதிர்க்கிறது.

தமிழர் சமய சார்பின்மை

அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன.

இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் அடிப்படையில் உருவான திராவிட கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்களும் குடும்பத்தினரும் கூட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் பல்வேறு மத திருத்தலங்களை தரிசிப்பது என்பதும் வழிபாடு செய்வது என்பதும் தமிழகத்தில் முரண்பாடான குழப்பமான நடைமுறைக் கொள்கையாக உள்ளது.[2][3][4][4][5][6]

சமயம் சாரா இலக்கியங்கள்

  1. திருக்குறள்- உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சமயம் சாரா புனித நூல் ஆகும்.இந்த நூலினை உலகப்பொதுமறை என்றும், தமிழர்மறை என்றும் கூறுவர்.

சமய சார்பின்மை போக்கு

தற்காலத்தில் பொது வாழ்விலும் அரசியலிலும் சமய சார்பின்மை போக்கினையே தமிழர் பெரிதும் பின்பற்றி வருகிறார்கள்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.