மண்புழு

மண்புழுக்களில்(Earthworms) அல்லது மழைப்புழுக்களில் பல வகைகள் உண்டு. பொதுவாக மண்புழுவனாது, வளைத்தசை உருளைப்புழுக்களின் தொகுதியின் கீழ் அமைகிறது. இது உழவர்களின் நண்பன் என்று புகழப்படுகிறது. ஏனெனில், தாவரக்கழிவுகளை உண்டு, அதனால் அதன் உடலிலிருந்து வரும் செரிமானக் கழிவால், அதன் வாழிட மண்ணை வளப்படுத்துகின்றன. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியால் மண்ணானது, மேலும் மிருதுவாக மாறுகிறது. மண்ணில் காற்றோட்டமும், நீரும் அதிகம் தங்கி விடுவதால், தாவர வேர்கள் அதிகத் தேவைகளை அடைகிறது.பெரும்புழுக்களுக்கே உரிய கிளைடெல்லம்(clitellum) இதன் சிறப்பு உடலுறுப்பாகும்.

மண்புழுக்கள்
Earthworms
மண்புழு(பொது)
Lumbricus terrestris
பச்சைநிற மண்புழு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: வளைத்தசைப்புழுக்கள்
வகுப்பு: en:Clitellata
வரிசை: en:Haplotaxida
துணைவரிசை: Lumbricina
பர்மிசுடர், 1837
குடும்பங்கள்
  1. Acanthodrilidae
  2. Ailoscolidae
  3. Alluroididae
  4. Almidae (கருத்து வேறுபாடுள்ளது)
  5. Criodrilidae
  6. Eudrilidae
  7. Exxidae
  8. Glossoscolecidae
  9. Hormogastridae
  10. Lumbricidae
  11. Lutodrilidae
  12. Megascolecidae
  13. Microchaetidae
  14. Ocnerodrilidae
  15. Octochaetidae
  16. Sparganophilidae

தகவமைப்புகள்

வலயம்

இதன் உருளைவடிவமான உடல், பல கண்டங்களாக பிரிக்கப்பட்டது போல, வெளித்தோற்றத்தில் உள்ளளது. உடலின் நுனி முதல், உடலின் அடி(மலப்புழை வரை)வரை, நீண்ட குழாய் போன்ற வாய்திறப்பு உள்ளது. முன்நுனிக்கு அருகே உடல் சற்று பருத்துக்காணப்படுகிறது. இதனை வலயம் (அ) கிளைடெல்லம் என்றழைப்பர்.

ஒற்றை அடுக்குக் கொண்ட இதன் புறத்தோல், வளைத்திசுக்களால் ஆனது. அதன் கீழ் நீண்ட தசைநார்களால் உள்ளன. இந்த தசைநார்கள் சுருங்கும் போது, மண்புழு அளவில் சிறியதாகி, உடல் பருத்து விடும். வளைத்திசுக்கள் சுருங்கும் போது, மண்புழுவின் உடல் நீண்டு விடும். இப்படி மாறி மாறி நார்தசைகள் இயங்குவதால், மண்புழு இடம் பெயருகிறது.

பெருந்தொகையான நுண்ணிய தோல்முடிகள், இந்த இயக்கத்திற்கு துணைப் புரிகின்றன.வளைத்திசுக்கள் சுருங்கும் போது, இந்த முடிகள் உடலின் பின்பகுதியை அசையாது பிடித்துக்கொள்கிறது. இதனால் உடலின் முன்நுனி நீள்கிறது. அதேபோல, முன்நுனியின் முடிகள் பிடித்துக் கொள்ளும் போது, பின்பக்க உடல், முன்னே இழுக்கப்படுகிறது.

உடலின் முன்நுனியிலுள்ள வாய் மண்ணை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது செரிமானம் நடைபெறுகிறது. மழைப்புழுவின் அடிப்பகுதி மேற்பகுதியை விட சற்று தட்டையாக இருக்கிறது. முன்,பின் உடலானது சமமாக அமைந்து, இது இருபக்கச் சமச்சீர் உடலி என்ற பெயரினைப் பெறுகிறது.

காட்சியகம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.