மணிகர்ணிகா படித்துறை

மணிகர்ணிகா படித்துறை (ஆங்கிலம்: Manikarnika Ghat) (இந்தி: मणिकर्णिका घाट): வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் கரை ஒரம் அமைந்துள்ள மிகப் பழமையான 85 படித்துறைகளுள் மணிகர்னிகா படித்துறை புகழ் பெற்றது. வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்துக்களில் பலர் நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படித்துறையில் நாள் முழுவதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.

மணிகர்னிகா படித்துறை, ஆண்டு 2007.

முக்கியமானவர்கள் இறந்தபின்னர், விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் கல் பலகையில் எரிக்கின்றனர். சாக்த சமயத்தினர்களுக்கு, மணிகர்ணிகா படித்துறை முக்கியமானது.

புராண வரலாறு

இங்குள்ள படித்துறையில் மணிகர்ணிகா என்றழைக்கப்படும் குளம் உள்ளது. பார்வதி தேவியின் தொலைந்து போன காதணியை (மணிகர்ணிகா) தேடும்போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக நம்பப்படுகிறது. [1][2][3] [4]

இது சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு உறையும் அம்மனை மணிகர்ணிகா என்று அழைக்கின்றனர்.

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. (Translator), F. Max Muller (June 1, 2004). The Upanishads, Vol I. Kessinger Publishing, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1419186418.
  2. (Translator), F. Max Muller (July 26, 2004). The Upanishads Part II: The Sacred Books of the East Part Fifteen. Kessinger Publishing, LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1417930160.
  3. "Kottiyoor Devaswam Temple Administration Portal". http://kottiyoordevaswom.com/. Kottiyoor Devaswam. பார்த்த நாள் 20 July 2013.
  4. http://www.varanasi.org.in/manikarnika-ghat

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.