மஞ்சு விஷ்ணு

மஞ்சு விஷ்ணு (ஆங்கிலம்:Manchu Vishnu) (பிறப்பு: 23 நவம்பர் 1981) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவரது பெயரில் விஷ்ணு என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். இவர் பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் என்ற போட்டியில் தெலுங்கு திரையுலகத்திற்கு ஆதரவானவர்.

மஞ்சு விஷ்ணு
Manchu Vishnu
பிறப்புமஞ்சு விஷ்ணு வர்தன் பாபு
23 நவம்பர் 1981 (1981-11-23)[1]
சென்னை
தமிழ்நாடு
இந்தியா
இருப்பிடம்ஐதராபாத்து
தெலுங்கானா
இந்தியா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003 – இன்று வரை
வாழ்க்கைத்
துணை
விரநிக்கா ரெட்டி
பிள்ளைகள்Ariaana and Viviana

ஆரம்பகால வாழ்க்கை

இவர் 23 நவம்பர் 1981ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபல்யமான நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். இவருக்கு மஞ்சு மனோஜ் என்ற ஒரு இளையசகோதரரும் மற்றும் மஞ்சு லட்சுமி என்ற ஒரு மூத்த சகோதரியும் உண்டு இவர்களும் நடிகர்கள் ஆவார். இவர் திரைத்துறைத் தொடர்பான படிப்பை மேற்கொண்டார்.

திரைப்படங்கள்

  • விஷ்ணு
  • சூர்யம்
  • கேம்
  • தீ
  • சலீம்
  • தூசுகெல்தா
  • ரவுடி
  • அனுகஷனம்

மேற்கோள்கள்

  1. "Happy Birthday to Manchu Vishnu". Filmcircle. 26 December 2011. http://filmcircle.com/happy-birthday-manch-vishnu/. பார்த்த நாள்: 27 December 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.