மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றதில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.


2009ஆம் ஆண்டு தேர்தல்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராகக் காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் உள்ளார், இதன் பதவிக்காலம் 2014, நவம்பர் 11 அன்று முடிவடைகிறது.

காங்கிரசுதேசியவாத காங்கிரசுசிவசேனாபாசகமகாராட்டிர நவநிர்மாண் சேனாகட்சி சாராதவர்கள்&மற்றவர்கள்
826245461340

தேர்தல் ஆணைய அறிவிப்பு

தேர்தல் தொடர்பான நிகழ்வுதேதி
தேர்தல் அறிவிக்கப்பட்டது2014, செப்டம்பர் 20
போட்டியிடுவதற்கான மனு அளிப்பதற்கான இறுதி தேதி2014, செப்டம்பர் 27
மனுக்கள் சரிபார்க்கப்படும் தேதி2014, செப்டம்பர் 29
மனுவை விலக்கிக்கொள்ள இறுதி தேதி2014, அக்டோபர் 01
தேர்தல் நடைபெறும் தேதி2014, அக்டோபர் 15
வாக்குகள் எண்ணப்படும் தேதி2014, அக்டோபர் 19

[1]


மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும் 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராட்டிராவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 92.40% ஆகும். இத்தேர்தலுக்காக 90,403 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [2]


கூட்டணிகள்

25 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து மகாராட்டிர தேர்தலை சந்தித்த பாசக-சிவசேனா கூட்டணி இத்தேர்தலில் முறிந்துள்ளது. அதுபோலவே காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் முறிந்துள்ளது. 2004, 2009 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனா-பாசக கூட்டணியும், காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகின்றன.

சிவசேனா-பாசக

1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் முறிந்தது என பாசக அறிவித்தது[3] [4]. 2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 169 தொகுதிகளிலும் பாசக 119 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். [5] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. [6]


2014 மக்களவைத்தேர்தலில் மாநிலத்தில் பெரிய கட்சியாக வந்ததால்[7] பாசக அதிக தொகுதிகளைக்கேட்கவும் முதலமைச்சர் பதவியை அதிக இடங்களில் வெல்பவர் பெற வேண்டும் என்று கூறியது. [8] மாநில பாசக தலைவர் சிவசேனா 150+ தொகுதிகளுக்குக் கீழ் வர மறுத்துவிட்டதாகவும் 135 தொகுதிகளிலிருந்து 127 தொகுதிகளுக்குத் தாங்கள் இறங்கி வந்ததாகவும், முதலமைச்சமைர் பதவியை விட்டுத்தர மறுத்துவிட்டதாகவும் கூறினார். [9]

காங்கிரசு - தேசியவாத காங்கிரசு

1999ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. காங்கிரசிலிருந்து விலகிய சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரசுக்கு அதுவே முதல் சட்டமன்ற தேர்தலாகும். காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பாசக-சிவசேனா கூட்டணியை விட அதிக இடம் பிடித்த காரணத்தால் அக்கூட்டணி பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக தேர்தலுக்கு பின் கூட்டணி கண்டன [10]. பின் அக்கூட்டணி 2004, 2009 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. 2014 சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு 144 தொகுதிகள் வேண்டும் என்றும் முதலமைச்சமைச்சர் பதவியை சுழற்சி முறையில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பங்கிடவேண்டும் என்றதேசியவாத காங்கிரசின் கோரிக்கையை காங்கிரசு ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக தேசியவாத காங்கிரசு கூறியது. [11]


பரப்புரை

மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பெரிய கட்சிகள் தொகுதிகளுக்காகச் சண்டையிட்டுப் பிரிந்தன என்றும் அவற்றுக்கு மகாராட்டிர மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்றும் கூறினார்.[12]

தேர்தல் முடிவு

கட்சி2014இல் வென்ற தொகுதிகள்2009இல் வென்ற தொகுதிகள்
பாசக12146
சிவசேனா6344
காங்கிரசு4282
தேசியவாத காங்கிரசு4162
மகாராட்டிர நவநிர்மாண் சேனா113
எம்.ஐ.எம்20
சி.பி.எம்10
மற்றவர்கள்1841

[13]

  பாரதிய ஜனதா கட்சி: 122 தொகுதிகள்
  சிவ சேனா: 63 தொகுதிகள்
  பகுஜன் விகாஸ் ஆகாதி: 3 தொகுதிகள்
  Peasants and Workers Party of India: 3 தொகுதிகள்
  All India Majlis-e-Ittehadul Muslimeen: 2 தொகுதிகள்
  Bharipa Bahujan Mahasangh: 1 தொகுதி
  Rashtriya Samaj Paksha: 1 தொகுதி
  சுயேட்சை 7 தொகுதிகள்



கட்சி வாரியாக வோட்டு சதவியிதம்[14]

  ஏனைய (13%)
கட்சிவென்ற தொகுதிகள்வோட்டுகள்வோட்டு சதவியிதம்மாற்றம்
பாரதிய ஜனதா கட்சி12214,709,45527.8%
சிவ சேனா6310,235,97219.3%
இந்திய தேசிய காங்கிரசு429,496,14418.0%
தேசியவாத காங்கிரசு கட்சி419,122,29917.2%
பகுஜன் விகாஸ் ஆகாதி3329,4570.6%
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி3533,3091.0%
அனைத்திந்திய மஜ்லிஸ்-இ- இத்திஹாதுல் முஸ்லிமீன்2489,6140.9%
பாரிப பகுஜன் மாகாசங்1472,9250.9%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)1207,9330.4%
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா11,665,0333.7%
ராஷ்டிரிய சமாஜ் பக்‌சா1256,6620.5%
சமாஜ்வாதி கட்சி192,3040.2%
கட்சி சாரா வேட்பாளர்72,494,0164.7%
மொத்தம்[14]28850,105,123100%பொருத்தமில்லை

முதல்வர்

புதிய முதல்வராக பாசகவின் மாநில தலைவர் தேவேந்திர பத்னாவிசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2014, நவம்பர் 11க்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும். பாசகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரசு வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாது.[15]


வென்ற வேட்பாளர்களின் பட்டியல்

The following is the list of candidates won: [14]

கேப்டன் தமிழ் செல்வன் என்பவர் பாசக கட்சி சார்பில் மும்பையின் ஒரு தொகுதியான சியோன் கோலிவாடாவில் வென்றுள்ளார். இச்சட்டப்பேரவையில் மராட்டிய சட்டமன்றத்துக்கு செல்லும் தமிழர் இவர்.

தொகுதியின் எண்சட்டமன்ற தொகுதியின் பெயர்உறுப்பினர்சார்ந்த கட்சிபெற்ற வாக்குகள்
1 அக்கல்குவாவழக்குரைஞர் பாட்வி கே. சி. இ. காங்கிரசு64,410
2ஷஃகாதாஉதேய்சிங் கோச்சரு பாட்விபாசக58,556
3நந்துர்பார்விஜயகுமார் கிருஷ்ணாராவ் காவிட்பாசக101,328
4நவாபூர்சுருப்சிங் ஹிர்யா நாய்க் இ. காங்கிரசு93,796
5சக்ரிதனஜி சீதாராம் Ahire இ. காங்கிரசு74,760
6துளே ஊரகம்குனால் (பாபா) ரோகிதாசு பாட்டில்l இ. காங்கிரசு119,094
7துளே நகரம்அனில் அன்னா Goteபாசக57,780
8சிந்துகேடாசெயகுமார் ஜித்தேந்திரசின்கா ராவல்பாசக92,794
9 சிர்பூர்காசிராம் Vechan Pawara இ. காங்கிரசு98,114
10சோப்டாSonawane Chandrakant Baliramசிவ சேனா54,176
11RaverHaribhau Madhav Jawaleபாசக65,962
12Bhusawalசஞ்சய் Waman Sawakareபாசக87,818
13ஜல்கான் நகரம்சுரேசு தாமு போலே (ராசுமாமா)பாசக88,363
14ஜல்கான் ஊரகம்lபாட்டில் குலாப் ரகுநாத்சிவ சேனா84,020
15AmalnerShirishdada Hiralal ChaudhariIndependent68,149
16ErandolAnnasaheb Dr. Satish Bhaskarrao PatilNCP55,656
17ChalisgaonUnmesh Bhaiyyasaheb Patilபாசக94,754
18 பச்சோராKishore Appa Patilசிவ சேனா87,520
19JamnerGirish Dattatray Mahajanபாசக103,498
20MuktainagarEknath Khadseபாசக85,657
21MalkapurChainsukh Madanlal Sanchetiபாசக75,965
22BuldhanaHarshwardhan Vasantrao Sapkal இ. காங்கிரசு46,985
23ChikhliRahul Siddhvinayak Bondre இ. காங்கிரசு61,581
24Sindkhed RajaDr Shashikant Narsingrao Khedekarசிவ சேனா64,203
25MehkarSanjay Bhashkar Raimulkarசிவ சேனா80,356
26KhamgaonAkash Pandurang Fundkarபாசக71,819
27Jalgaon (Jamod)Kute Dr. Sanjay Shriramபாசக63,888
28AkotPrakash Gunvantrao Bharsakaleபாசக70,086
29BalapurBaliram Bhagwan SirskarBBM41,426
30அகோலா மேற்குGovardhan Mangilal Sharmaபாசக66,934
31அகோலா கிழக்குSavarkar Randhir Pralhadraoபாசக53,678
32MurtizapurHarish Pimpleபாசக54226
33RisodAmit Subhashrao Zanak இ. காங்கிரசு]70,939
34வாசிம்Malik Lakhan Sahadeoபாசக48,196
35KaranjaPatni Rajendra Sukhanadபாசக44,751
36Dhamamgaon RailwayJagtap Virendra Walmik இ. காங்கிரசு70,879
37BadneraRavi RanaIndependent46,827
38அமராவதிDeshmukh Sunil Panjabraoபாசக84,033
39TeosaAdv Yashomati Thakur (Sonawane) இ. காங்கிரசு58,808
40DaryapurRamesh Ganpatrao Bundileபாசக64,224
41MelghatBhilawekar Prabhudas Babulalபாசக57,002
42AchalpurBacchu alias Omprakash Babarao KaduIndependent59,234
43MorshiDr Anil Sukhdevrao Bondeபாசக71,611
44ArviAmar Sharadrao Kale இ. காங்கிரசு75,886
45DeoliKamble Ranjit Prataprao இ. காங்கிரசு62,533
46HinganghatKunawar Samir Trambakraoபாசக90,275
47WardhaDr Pankaj Rajesh Bhoyarபாசக45,897
48KatolAshish Ranjeet Deshmukhபாசக70,344
49SavnerKedar Sunil Chhtrapal இ. காங்கிரசு84,630
50HingnaMeghe Sameer Dattatrayaபாசக84,139
51UmredParwe Sudhir Laxmanraoபாசக92,399
52நாக்பூர் தென்மேற்குதேவேந்திர பத்னாவிசுபாசக113918
53நாக்பூர் தெற்குKohale Sudhakar VittalraoBJP81,224
54நாக்பூர் கிழக்குKrishna Pancham KhopdeBJP99136
55மத்திய நாக்பூர்Kumbhare Vikas ShankarraoBJP87,523
56நாக்பூர் மேற்குSudhakar Shamrao Deshmukhபாசக86,500
57நாக்பூர் வடக்குDr Milind ManeBJP68,905
58KamthiChandrashekhar Krushnarao Bawankuleபாசக126,755
59RamtekReddy Dwaram Mallikarjun Ram Reddyபாசக59,343
60TumsarCharan Waghmare[[[பாசக]]73,950
61BhandaraAvsare Ramchandra Punajiபாசக83,408
62SakoliKashiwar Rajesh Lahanuபாசக80,902
63Arjuni-MorgaonBadole Rajkumar Sudamjiபாசக64,401
64TiroraRahangdale Vijay Bharatlalபாசக54,160
65GondiyaAgrawal Gopaldas Shankarlal இ. காங்கிரசு62,701
66AmgaonPuram Sanjay Hanwantraoபாசக62,590
67ArmoriKrushna Damaji Gajbeபாசக60,413
68GadchiroliDr. Deorao Madguji Holi[[[பாசக]]70,185
69AheriSatyavanrao Atram Ambarishrao Raje[[[பாசக]]56,418
70RajuraSanjay Yadaorao Dhoteபாசக66,223
71ChandrapurShamkule Nanaji Sitaramபாசக81,483
72BallarpurMungantiwar Sudhir Sachhidanandபாசக103,718
73BrahmapuriWadettiwar Vijay Namdevrao இ. காங்கிரசு70,373
74ChimurBanti Bhangdiyaபாசக87,377
75WaroraSuresh alias Balubhau Narayan Dhanorkarசிவ சேனா53,877
76WaniBodkurwar Sanjivreddi Bapuraoபாசக45,178
77 ராலேகான்Ashok Ramji Wooikeபாசக100,618
78YavatmalMadan Madhukarrao Yerawarபாசக53,671
79DigrasRathod Sanjay Dulichandசிவ சேனா121,216
80ArniRaju Narayan Todsamபாசக86,991
81PusadNaik Manohar RajusingNCP94,152
82UmarkhedRajendra Waman Najardhaneபாசக90,190
83KinwatJadhav Pradeep NaikNCP60,127
84HadgaonAshtikar Patil Nagesh Bapuraoசிவ சேனா78,520
85BhokarAmeeta Ashokrao Chavan இ. காங்கிரசு100,781
86Nanded வடக்குD. P. Sawant இ. காங்கிரசு40,356
87Nanded தெற்குHemant Sriram Patilசிவ சேனா45,836
88LohaChikhalikar Prataprao Govindraoசிவ சேனா92,435
89NaigaonChavan Vasantrao Balwantrao இ. காங்கிரசு71,020
90DeglurSabne Subhash Pirajiசிவ சேனா66,852
91MukhedGovind Mukkaji Rathodபாசக118,781
92BasmathMundada Jaiprakash Shankarlalசிவ சேனா63,851
93KalamnuiTarfe Santosh Kautika இ. காங்கிரசு67,104
94HingoliMutkule Tanhaji Sakharamjiபாசக97,045
95JinturBhamale Vijay ManikraoNCP106,912
96ParbhaniRahul Vedprakash Patilசிவ சேனா71,584
97GangakhedMadhusudan Manikrao KendreNCP58,415
98PathriFad Mohan MadhavraoIndependent69,081
99ParturBabanrao Dattatray Yadav Lonikarபாசக46,937
100GhansawangiRajeshbhaiyya TopeNCP98,030
101JalnaArjun Panditrao KhotkarSS45,078
102BadnapurKuche Narayan Tilakchandபாசக73,560
103BhokardanDanave Santosh Raosahebபாசக69,597
104SillodAbdul Sattar Abdul Nabi இ. காங்கிரசு96,038
105KannadJadhav Harshvardhan Raibhanசிவ சேனா62,542
106PhulambriBagde Haribhau Kisanraoபாசக73,294
107மத்திய அவுரங்காபாத்சையத் இம்தியாசு ஜலீல்AIMIM61,843
108அவுரங்காபாத் மேற்குSanjay ShirsatSS61,282
109அவுரங்காபாத் கிழக்குAtul Moreshwar Saveபாசக64,528
110PaithanBhumre Sandipanrao Aasaramசிவ சேனா66,991
111GangapurBamb Prashant Bansilalபாசக55,483
112VaijapurBhausaheb Patil ChikatgaonkarNCP53,114
113NandgaonPankaj Chhagan BhujbalNCP69,263
114மத்திய மாலேகான்Shaikh Aasif Shaikh Rshid இ. காங்கிரசு75,326
115வெளிவட்ட மாலேகான்Dadaji Dagadu Bhuseசிவ சேனா82093
116BaglanChavan Dipika SanjayNCP68,434
117KalwanGavit Jiva PanduCPM67,795
118ChandvadDr. Aher Rahul DaulatraoBJP54,946
119YewlaChhagan BhujbalNCP112,787
120SinnarRajabhau (Parag) Prakash Wajeசிவ சேனா104,031
121NiphadAnil Sahebrao Kadamசிவ சேனா78,186
122DindoriZirwal Narhari SitaramNCP68,284
123நாசிக் கிழக்குBalasaheb Mahadu SanapBJP78,941
124 மத்திய நாசிக்Devayani Suhas FarandeBJP61,548
125நாசிக் மேற்குHiray Seema Mahesh (Seematai)BJP67,489
126DevlaliGholap Yogesh (Bapu) BabanraoSS49,751
127IgatpuriGaveet Nirmala Ramesh இ. காங்கிரசு49,128
128DahanuDhanare Paskal JanyaBJP44,849
129VikramgadSavara Vishnu RamaBJP40,201
130PalgharGhoda Krushna Arjunசிவ சேனா46,142
131BoisarTare Vilas SukurBVA64,550
132NalasoparaKshitij Hitendra ThakurBVA113,566
133VasaiHitendra Vishnu ThakurBVA97,291
134Bhiwandi Rural (ST)Shantaram Tukaram MoreSS57,082
135ShahapurBarora Pandurang MahaduNCP56,813
136Bhiwandi WestChoughule Mahesh Prabhakarபாசக42,483
137Bhiwandi EastRupesh Laxman MhatreSS33,541
138 கல்யாண் மேற்குNarendra Baburao Pawarபாசக54,388
139MurbadKisan Shankar Kathoreபாசக85,543
140AmbernathDr. Balaji Kinikarசிவ சேனா47,000
141UlhasnagarJyoti Pappu KalaniNCP43,760
142 கல்யாண் கிழக்குGanpat Kalu GaikwadIndependent36,357
143DombivaliChavhan Ravindra Dattatrayபாசக83,872
144கிராமப்புற கல்யாண்Bhoir Subhash Ganuசிவ சேனா84,110
145Mira BhayandarNarendra Mehtaபாசக91,468
146Ovala-MajiwadaPratap Baburao Sarnaikசிவ சேனா68,571
147Kopri-PachpakhadiEknath Sambhaji Shindeசிவ சேனா100,316
148ThaneSanjay Mukund Kelkarபாசக70,884
149Mumbra-KalwaJitendra AwhadNCP86,533
150AiroliSandeep Ganesh NaikNCP76,444
151BelapurManda Vijay Mhatreபாசக55,316
152BorivaliVinod Tawdeபாசக108,278
153DahisarChaudhary Manisha Ashokபாசக77,238
154MagathanePrakash Surveசிவ சேனா65,016
155MulundSardar Tara Singhபாசக90,260
156VikhroliSunil Rajaram Rautசிவ சேனா50,302
157Bhandup WestAshok PatilSS48,151
158Jogeshwari EastRavindra Dattaram WaikarSS72,767
159DindoshiSunil PrabhuSS56,577
160Kandivali EastAtul Bhatkhalkarபாசக72,427
161CharkopYogesh Sagarபாசக96,097
162Malad WestAslam Shaikh இ. காங்கிரசு56,574
163GoregaonVidya Thakurபாசக63,629
164VersovaDr. Bharati Hemant Lavekarபாசக49,182
165அந்தேரி மேற்குAmeet Bhaskar Satamபாசக59,022
166அந்தேரி கிழக்குRamesh Latkeசிவ சேனா52,817
167Vile ParleParag Alavaniபாசக74,270
168ChandivaliKhan Mohammed Arif (Naseem) இ. காங்கிரசு73,141
169Ghatkopar WestRam Kadamபாசக80,343
170Ghatkopar EastMehta Prakash Manchhubhaiபாசக67,012
171Mankhurd Shivaji NagarAbu Asim AzmiSP41,719
172Anushakti NagarTukaram Ramkrishna KateSS39,966
173ChemburPrakash Vaikunth PhaterpekarSS47,410
174KurlaMangesh Kudalkarசிவ சேனா41,580
175KalinaSanjay Govind Potnisசிவ சேனா30,715
176Vandre EastPrakash (Bala) Sawantசிவ சேனா41,388
177Vandre WestAshish Shelarபாசக74,779
178தாராவிVarsha Eknath Gaikwad இ. காங்கிரசு47,718
179 சியோன் கோலிவாடாகேப்டன் ஆர். தமிழ் செல்வன்பாசக40,869
180WadalaKalidas Nilkanth Kolambkar இ. காங்கிரசு38,540
181MahimSada Sarvankarசிவ சேனா46,291
182 வோர்லிSunil Govind Shindeசிவ சேனா60,625
183ShivadiAjay Choudhariசிவ சேனா72,462
184BycullaWaris Yusuf PathanAIMIM25,314
185மலமார் மலைMangal Lodhaபாசக97,818
186MumbadeviAmin Patel இ. காங்கிரசு39,188
187ColabaRaj K. Purohitபாசக52,608
188PanvelPrashant Ramsheth Thakurபாசக125,142
189KarjatSureshbhau Narayan LadNCP57,013
190UranManohar Gajanan Bhoirசிவ சேனா56,131
191PenDhairyasheel Mohan PatilPWPI64,616
192AlibagSubhash alias Panditshet PatilPWPI76,959
193ShrivardhanAvdhoot Anil TatkareNCP61,038
194MahadBharat Maruti Gogawaleசிவ சேனா94,408
195JunnarSharaddada Bhimaji SonawaneMNS60,305
196AmbegaonDilip Dattatray Walse PatilNCP120,235
197Khed AlandiSuresh Namdeo Goreசிவ சேனா103,207
198ShirurBaburao Kashinath Pacharneபாசக92,579
199DaundKul Rahul SubhashraoRSP87,649
200IndapurDattatray Vithoba BharneNCP108,400
201BaramatiAjit Anantrao PawarNCP150,588
202PurandarVijaybapu Shivtareசிவ சேனா82,339
203BhorSangram Anantrao Thopate இ. காங்கிரசு78,602
204MavalBhegade Sanjay (Bala) Vishwanathபாசக95,319
205ChinchwadJagtap Laxman Pandurangபாசக123,786
206PimpriChabukswar Gautam Sukhdeoசிவ சேனா51,096
207BhosariMahesh (Dada) Kisan LandgeIndependent60,173
208VadgaonsheriJagdish Tukaram Mulukபாசக66,908
209 சிவாஜி நகர்Vijay Kaleபாசக56,460
210KothrudMedha Vishram Kulkarniபாசக98,235
211KhadakwaslaTapkir Bhimrao Dhondibaபாசக111,531
212ParvatiMadhuri Satish Misalபாசக95,583
213HadapsarTilekar Yogesh Kundalikபாசக82,629
214பூனா கன்மடோண்மெண்ட்Dilip Kambleபாசக54,692
215Kasba PethBapat Girish Bhalchandraபாசக73,594
216AkolePichad Vaibhav MadhukarNCP67,696
217SangamnerVijay alias Balasaheb Bhausaheb Thorat இ. காங்கிரசு103,564
218ShirdiRadhakrishna Eknathrao Vikhe Patil இ. காங்கிரசு121,459
219KopargaonKolhe Snehalatatai Bipindadaபாசக99,763
220ShrirampurBhausaheb Malhari Kamble இ. காங்கிரசு]57,118
221NevasaBalasaheb alias Dadasaheb Damodhar Murkuteபாசக84,570
222Shevgaon PathrdiMonika Rajiv Rajaleபாசக134,685
223RahuriKardile Shivaji Bhanudasபாசக91,454
224ParnerAuti Vijayrao Bhaskarraoசிவ சேனா73,263
225அகமத்நகர் நகரம்Sangram Arunkaka JagtapNCP49,378
226ShrigondaJagtap Rahul KundlikraoNCP99,281
227Karjat JamkhedRam Shankar Shindeபாசக84,058
228GeoraiPawar Laxman Madhavroபாசக136,384
229MajalgaonR. T. Deshmukh (Jija)பாசக112,497
230BeedKshirsager Jaydattji SonajiraoNCP77,134
231AshtiDhonde Bhimrao Anandraoபாசக120,915
232KaijThombre Sangeeta Vijayprakashபாசக106,834
233பார்லிபஞ்கஜ முண்டேபாசக96,904
234Latur RuralBhise Trimbakrao Shrirangrao இ. காங்கிரசு100,897
235Latur CityAmit Deshmukh இ. காங்கிரசு119,656
236AhmadpurJadhav Patil Vinayakrao KishanraoIndependent61,957
237UdgirSudhakar Sangram Bhaleraoபாசக66,686
238NilangaNilangekar Sambhaji Deeliprao Patilபாசக76,817
239AusaBasavraj Madhavrao Patil இ. காங்கிரசு64,237
240UmargaChougule Dnyanraj Dhondiramசிவ சேனா65,178
241TuljapurChavan Madhukarrao Deorao இ. காங்கிரசு70,701
242OsmanabadRana Jagjit Sinha Padma Sinha PatilNCP88,469
243ParandaMote Rahul MaharudraNCP78,548
244KarmalaPatil Narayan Govindraoசிவ சேனா60,674
245MadhaShinde Babanrao VitthalraoNCP97,803
246BarshiDilip Gangadhar SopalNCP97,655
247MoholRamesh Nagnath KadamNCP62,120
248Solapur City NorthVijay Sidramappa Deshmukhபாசக86,877
249Solapur City CentralShinde Praniti Sushilkumar இ. காங்கிரசு46,907
250AkkalkotSiddharam Satlingappa Mhetre இ. காங்கிரசு97,333
251Solapur SouthDeshmukh Subhash Sureshchandraபாசக70,077
252PandharpurBhalake Bharat Tukaram இ. காங்கிரசு91,863
253SangolaDeshmukh Ganpatrao AnnasahebPWPI94,374
254MalshirasDolas Hanumant JagannathNCP77,179
255PhaltanChavan Dipak PralhadNCP92,910
256WaiJadhav (Patil) Makarand LaxmanraoNCP101,218
257KoregaonShinde Shashikant JaywantraoNCP95,213
258ManJaykumar Bhagwanrao Gore இ. காங்கிரசு75,708
259Karad NorthPatil Shamrao alias Balaso PandurangNCP78,324
260Karad SouthPrithviraj Chavan இ. காங்கிரசு76,831
261PatanDesai Shambhuraj Shivajiraoசிவ சேனா104,419
262SataraBhonsle Shivendrasinh AbhaysinhNCP97,964
263DapoliKadam Sanjay VasantNCP52,907
264GuhagarJadhav Bhaskar BhauraoNCP72,525
265ChiplunChavan Sadanand Narayanசிவ சேனா75,695
266RatnagiriUday Ravindra Samantசிவ சேனா93,876
267RajapurSalvi Rajan Prabhakarசிவ சேனா76,266
268KankavliNitesh Narayan Rane இ. காங்கிரசு74,715
269KudalNaik Vaibhav Vijayசிவ சேனா70,582
270SawantwadiDeepak Kesarkarசிவ சேனா70,902
271ChandgadDesai-Kupakar Sandhyadevi KrushnaraoNCP51,599
272RadhanagariAabitakar Prakash Anandaraoசிவ சேனா132,485
273KagalMushrif Hasan MiyalalNCP123,626
274கோலாப்பூர் தெற்குAmal Mahadikபாசக107,998
275KarvirNarke Chandradip Shashikantசிவ சேனா107,998
276Kolhapur NorthRajesh Vinayakrao Kshirsagarசிவ சேனா69,736
277ShahuwadiSatyajeet Babasaheb Patil (Aba) Sarudkarசிவ சேனா74,702
278HatkanangaleMinchekar Sujit Vasantraoசிவ சேனா89,087
279IchalkaranjiSuresh Ganpati Halvankarபாசக94,293
280ShirolUlhas Sambhaji Patilசிவ சேனா70,809
281MirajSureshbhau Dagadu Khadeபாசக93,795
282சாங்லிDhananjay alias Sudhir Dada Hari Gadgilபாசக80,497
283IslampurJayant Rajaram PatilNCP113,045
284ShiralaShivajirao Yashwantrao Naikபாசக85,363
285Palus-KadegaonPatangrao Kadam இ. காங்கிரசு112,523
286KhanapurAnilbhau Babarசிவ சேனா72,849
287Tasgaon-Kavathe MahankalR. R. PatilNCP108,310
288JathJagtap Vilasrav Narayanபாசக72,885

மேற்கோள்கள்

  1. http://eci.nic.in/eci_main1/AE2014/MAHARASHTRA.htm
  2. http://eci.nic.in/eci_main1/current/PN43_12092014.pdf ELECTION COMMISSION OF INDIA PRESS NOTE
  3. http://timesofindia.indiatimes.com/india/Maharashtra-polls-Shiv-Sena-BJP-Congress-NCP-alliances-snap-its-a-5-cornered-fight/articleshow/43458250.cms Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances snap; it's a 5-cornered fight
  4. http://www.rediff.com/news/report/its-official-25-year-old-bjp-shiv-sena-alliance-in-maharashtra-ends/20140925.htm It's official: 25-year-old BJP, Shiv Sena alliance in Maharashtra ends
  5. http://ibnlive.in.com/news/maharashtra-elections-bjp-ends-25yearold-alliance-with-shiv-sena-as-seat-sharing-talks-fail/501837-3-237.html Maharashtra elections: BJP ends 25-year-old alliance with Shiv Sena as seat sharing talks fail
  6. http://timesofindia.indiatimes.com/india/The-first-time-the-Sena-BJP-split-and-Sharad-Pawar-stepped-in/articleshow/43144335.cms The first time the Sena-BJP split and Sharad Pawar stepped in
  7. http://articles.economictimes.indiatimes.com/2014-09-26/news/54353272_1_chief-ministership-congress-ncp-seats-bjp Maharashtra polls: Shiv Sena-BJP, Congress-NCP alliances break; it's a four-cornered contest now
  8. http://www.hindustantimes.com/specials/coverage/assembly-elections-2014/assemblyelections2014-maharashtra/maharashtra-polls-uddhav-seeks-to-become-cm-urges-people-to-give-him-a-chance/sp-article10-1263615.aspx BJP, Sena in tussle as Uddhav eyes CM post
  9. http://indianexpress.com/article/cities/mumbai/objective-of-shiv-senas-mission-150-was-to-get-cm-post/ Objective of Shiv Sena’s Mission 150+ was to get CM post
  10. http://www.dnaindia.com/india/report-seat-sharing-stalemate-congress-ncp-may-ally-post-maharashtra-assembly-polls-2018390 Seat sharing stalemate: Congress, NCP may ally post Maharashtra Assembly polls?
  11. http://www.ndtv.com/elections/article/india/will-fight-elections-alone-alliance-with-congress-over-says-ncp-597982?curl=1413062314 Will Fight Elections Alone, Alliance With Congress Over, Says NCP
  12. http://www.ndtv.com/elections/article/assembly-polls/teach-big-four-a-lesson-in-maharashtra-assembly-polls-raj-thackeray-tells-voters-601661?curl=1413062803 Teach 'Big Four' a Lesson in Maharashtra Assembly Polls: Raj Thackeray Tells Voters
  13. "Maharashtra assembly elections 2014: Owaisi’s MIM gets 2 seats, Raj Thackeray’s MNS just 1". timesofindia. பார்த்த நாள் 19 அக்டோபர் 2014.
  14. http://eciresults.nic.in/PartyWiseResultS13.htm?st=S13
  15. "Done. Devendra Fadnavis As Maharashtra Chief Minister". ndtv. பார்த்த நாள் 28 அக்டோபர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.