ம. சா. அறிவுடைநம்பி

ம. சா. அறிவுடைநம்பி (மார்ச் 6, 1954 - சனவரி 3, 2014) தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள் துறையின் மேனாள் தலைவராகவும் பணியாற்றியவர்.[1]

முனைவர் ச. சாம்பசிவனார், சா. மனோன்மணி ஆகியோருக்குப் பிறந்த அறிவுடைநம்பி இளம் அறிவியல் பயின்றவர் தமிழ் முதுகலை, முனைவர், முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றவர். திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக்கொள்கைகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும், தஞ்சை மராட்டிய மன்னர்கள் வளர்த்த நுண்கலைகள் என்னும் தலைப்பில் முதுமுனைவர் பட்டமும் ஆய்வுசெய்து பெற்றவர். ஆய்வுப்பணிகளில் முப்பதாண்டுகள் பட்டறிவுடைய இவர் பதினெட்டு ஆண்டுகள் கல்விப்பணியில் பட்டறிவு உடையவர். இவர் மேற்பார்வையில் பதினான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 65 பேர் இளம் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.[1]

வெளி வந்த நூல்கள்

  • போதமும் சுபக்கமும், 1978
  • மூவர் தேவாரம் முதல் 5 பதிகங்கள்(மூலமும் உரையும்), 1981
  • .திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக்கொள்கைகள், 1986
  • சைவத்தமிழ் 1992
  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் பகுதி 1, 1994
  • புத்துலகச் சிந்தனைகள்,2003
  • உள்ளங்கவர் ஓவியம்,2003
  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் -பகுதி 2, 2003
  • தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் -பகுதி 3, 2004
  • நிகழ்வுக் கலைகள்,2004
  • திருக்கோயில் வளர்க்கும் ஓவியக்கலை,2004
  • தஞ்சை மராட்டிய மன்னர்கள் வளர்த்த நுண்கலைகள்,2006
  • .இலக்கியச்செல்வம்,2006
  • பதிப்புச் சிந்தனைகள்,2006
  • குமரகுருபரர்,2007
  • சைவமும் வாழ்வியலும்,2007
  • ஏட்டிலக்கியம்,2008

பதிப்பித்த நூல்கள்

  • தமிழக வரலாற்றறிஞர்கள் தொகுதி 1,(இணைப் பதிப்பாசிரியர்), 1993
  • ஆறாம் உலகச் சைவ மாநாட்டு மலர்(இணைப் பதிப்பாசிரியர்),1997
  • காகிதச்சுவடி ஆய்வுகள்(பதிப்பாசிரியர்),2000
  • பதிப்பு நிறுவனங்கள், (ப.ஆ),2002
  • தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆய்வுப்பனுவல்,(இ.பதி.)2003
  • சுவடிப் பதிப்பாசிரியர்கள்(ப.ஆ), 2004
  • பதிப்பியல் நெறிமுறைகள்,(ப.ஆ),2004
  • ஆராய்ச்சி நெறிமுறைகளும் சுவடிகளைப் பதிப்பித்தலில் எழும் சிக்கல்களும்,2004
  • தமிழக அறிஞர்கள் கடிதங்கள்,(ப.ஆ),2006
  • அமைதித்தமிழ்(ப.ஆ),(2006)
  • தமிழும் உலக ஒற்றுமையும்,2006
  • சுவடியியல் கலைச்சொல் விளக்க அகராதி,2006
  • ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம்(ப.ஆ),2007

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.