ம. கனகரத்தினம்

மயில்வாகனம் கனகரத்தினம் (Mylvaganam Canagaratnam, 15 ஏப்ரல் 1924 20 ஏப்ரல் 1980) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

எம். கனகரத்தினம்
M. Canagaratnam

நாஉ
பொத்துவில் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
பின்வந்தவர் ரங்கநாயகி பத்மநாதன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 15, 1924(1924-04-15)
இறப்பு 20 ஏப்ரல் 1980(1980-04-20) (அகவை 56)
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

கனகரத்தினம் 1924 ஏப்ரல் 15 இல் பிறந்தவர்.[1] இவர் 1977 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக இரட்டை-அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் போட்டியிட்டு இரண்டாவதாகத் தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார்.[2] தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் (1977 டிசம்பரில்) இவர் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். இதன் மூலம் அவர் மட்டக்களப்புக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]

தாக்குதல்

கனகரத்தினம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முன்னால் 1978 சனவரி 24 இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டார்.[5] இவர் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[4][6] படுகாயமடைந்த நிலையில் 1980 ஏப்ரல் 20 இல் இவர் காலமானார்.[3][5]

மேற்கோள்கள்

  1. "Canagaratnam, Mylvaganam". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Appapillai Amirthalingam V. Piyasekera, M. A. Commissioner of Elections and Others". LawNet.
  4. Rajasingham, K. T.. "Chapter 25: War or peace?". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DB02Df03.html.
  5. Sri Kantha, Sachi (6 ஏப்ரல் 2009). "Kasi Ananthan at 70". இலங்கைத் தமிழ்ச் சங்கம்.
  6. Rajasingham, K. T.. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DB16Df06.html.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.