போர்க் கைதி

போர்க் கைதி (Prisoner of war) என்பது போரில் கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும்.

1915இல் ரஷ்யாவில் ஆஸ்திரிய-ஹங்கேரிய போர்க் கைதிகள்

உலக வரலாற்றில் போர்கள் முடிந்து விட்டதற்கு பிறகு பொதுவாக தோல்வி அடைந்த படையினர்கள் போர் கைதியாக சிக்கி கொல்லப்பட்டனர் அல்லது அடிமை ஆகியுள்ளனர். மத்திய காலங்களில் நடந்த போர்களில் கைபற்றிய நகரங்களின் மக்கள் பொதுவாக படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாம் தொடங்கிய காலத்தில் முகமது போர் கைதிகளுக்கு உணவும் உடைகளும் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனாலும் சிலுவைப் போர்களில் கைபற்றிய கிறிஸ்தவ போர் கைதிகள் பொதுவாக அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். கிறிஸ்தவ ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" என்று குறிப்பிட்டு பொதுவாக கொல்லப்பட்டனர். 1648இல் முப்பது ஆண்டுப் போர் முடிவில் வெஸ்ட்ஃபேலியா அமைதி ஒப்பந்தம் முதலாக ஐரோப்பாவில் போர் கைதிகளுக்கு சில உரிமைகள் கொடுத்தது.

அண்மைய காலங்களில் ஹேக் உடன்படிக்கையிலும் ஜெனீவா உடன்படிக்கைகளிலும் போர் கைதிகளுக்கு பன்னாட்டு சட்டங்களில் பல உரிமைகள் தெரிவிக்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் காரணமாக போர் கைதிகளை வதை செய்வது உலகில் சட்டவிரோதமானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் 20ஆம் நூற்றாண்டிலும் ஜப்பானியப் பேரரசு, நாசி ஜெர்மனி போன்ற சில நாடுகள் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக போர் கைதிகளுக்கு பல கொடுமைகளை செய்தன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.