பொகாரோ ஸ்டீல் சிட்டி

பொகாரோ ஸ்டீல் சிட்டி அல்லது பொகாரோ எஃகு நகரம் (Bokaro Steel City, இந்தி: बोकारो स्टील सिटी) இந்திய மாநிலம் சார்க்கண்டில் உள்ள ஓர் தொழில்நகரமாகும். கிழக்கு இந்தியாவில் உள்ள ஓர் முகனையான தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 200 ச.கிமீ பரப்பளவுள்ள நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு முறையாக கட்டப்பட்டுள்ள இந்த நகரத்தில் 4/6 வழிப் பாதைகளும் நல்ல கழிவுநீரகற்று முறைமையும் 24 மணி நேரமும் தவறாத மின்சாரமும் பசுமைச்சூழல் கெடாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

பொகாரோ ஸ்டீல் சிடி
  நகரம்  
பொகாரோ ஸ்டீல் சிடி
இருப்பிடம்: பொகாரோ ஸ்டீல் சிடி
, சார்க்கண்ட்
அமைவிடம் 23°40′N 86°09′E
நாடு  இந்தியா
மாநிலம் சார்க்கண்ட்
மாவட்டம் பொகாரோ
ஆளுநர் [1]
முதலமைச்சர் ரகுபர் தாசு[2]
மக்களவைத் தொகுதி பொகாரோ ஸ்டீல் சிடி
மக்கள் தொகை

அடர்த்தி

497 (2001)

8,760/km2 (22,688/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

183 கிமீ2 (71 சதுர மைல்)

210 மீட்டர்கள் (690 ft)

இணையதளம் www.bokaro.nic.in

பொகாரோ ஆசியாவிலேயே மிகப்பெரும் எஃகு உருக்காலைக்கும் தரமான கல்வி நிறுவனங்களுக்கும் பெயர்பெற்றது. தவிர, சுற்றலாப் பயணிகளுக்கும் விருப்பமான இடமாக விளங்குகிறது. இங்கு பொகாரோ எஃகு ஆலை, பொகாரோ அனல்மின் நிலையம், சந்திரப்புரா அனல்மின் நிலையம், தெனுகாட் அனல்மின் நிலையம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்ஸ் மற்றும் பல சிறிய,பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. பொகாரோ மாவட்டம்|பொகாரோ மாவட்டத்திற்கும் தன்பாத், பொகாரோ மற்றும் கிரித் அடங்கிய கோய்லாஞ்சல் வட்டாரத்திற்கும் தலைநகரமாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.