பெருமகன்
பெருமகன் என்னும் சொல் சங்க நூல்களில் குறிப்பிட்ட ஒரு குடிமக்களின் தலைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்களில் தலைவன் ‘பெருமகன்’ எனக் குறிப்பிடப்படுதலும் உண்டு. [1] எந்த மன்னன் எந்த வகையான குடிமக்களின் தலைவன் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
- ஆவியர் பெருமகன் – பேகன் [2]
- இளையர் பெருமகன் - அழிசி [3]
- இளையர் பெருமகன் - தொகுபோர்ச் சோழன் [4]
- இளையர், கல்லா இளையர் பெருமகன் - புல்லி [5]
- இளையர், வல்வில் இளையர் பெருமகன் - நள்ளி [6]
- ஓவியர் பெருமகன் - ஓய்மானாட்டு நல்லியக்கோடன் [7]
- கள்வர் பெருமகன் - தென்னன் [8]
- குறவர் பெருமகன் - ஏறைக்கோன் [9]
- சான்றோர் பெருமகன் - செல்வக்கடுங்கோ வாழியாதன் [10]
- சோழர் பெருமகன் - இளம்பெருஞ் சென்னி [11]
- பாணர் பெருமகன் – அகத்திணைத் தலைவன் [12]
- பூழியர் பெருமகன் - செல்வக்கடுங்கோ வாழியாதன் [13]
- மடப்பிடி அகவுநர் பெருமகன் - அஃதை [14]
- மழவர் பெருமகன் - அதயமான் [15]
- மழவர் பெருமகன் - மாவள் ஓரி [16]
- வடுகர் பெருமகன் - எருமை நல் நாட்டு அயிரியாறு [17]
- வயவர் பெருமகன் - ஆய் [18]
- வயவர் பெருமகன் - தொண்டைமான் இளந்திரையன் [19]
- விச்சியர் பெருமகன் [20]
- வில்லோர் பெருமகன் - மிஞிலி [21]
- காண்க
அடிக்குறிப்பு
- நற்றிணை 150
- சிறுபாணாற்றுப்படை 85-86
- குறுந்தொகை 258
- அகம் 338
- அகம் 83
- அகம் 152
- சிறுபாணாற்றுப்படை 122
- அகம் 342
- புறம் 157
- பதிற்றுப்பத்து 67-18
- அகம் 375
- ஐங்குறுநூறு 458
- புறம் 387
- அகம் 113
- புறம் 88
- நற்றிணை 52
- அகம் 253
- அகம் 69
- பெரும்பாணாற்றுப்படை 101
- குறுந்தொகை 328
- நற்றிணை 265
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.