பெடலிங் தெரு, கோலாலம்பூர்
பெடலிங் தெரு (Petaling Street, மலாய்: ஜாலன் பெடலிங், எளிமைப்படுத்தப்பட்ட சீனம்: 茨厂街, வழமையான சீனம்: 茨廠街) மலேசியாவின் கோலாலம்பூர்|கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் சீனப்பகுதியாகும். இந்தக் கடைத்தெரு துணிமணிகள், இலத்திரனியப் பொருட்கள், பாடல்/திரைப்பட குறுவட்டுக்கள்/ இறுவட்டுக்கள் விற்பனை ஆகின்றன. உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கூடும் இங்கு பேரம் பேசி விலையைக் குறைப்பதும் போலிப்பொருட்கள்/ காப்புரிமை மீறபட்ட பொருட்கள் விற்கப்படுவதும் பொதுவான கூறுகளாக உள்ளன.

இந்தப் பகுதியில் பல உணவகங்களும் தெருவோர உணவுக்கடைகளும் உள்ளன. ஒக்கியன் மீ, கான் பகார் என்ற தீயிலிட்ட மீன், ஆசம் லக்சா, கறி நூடுல்ஸ் போன்ற உள்ளூர் சிற்றப்புணவுகளுக்கு இவை புகழ்பெற்றுள்ளன. இங்குள்ள வணிகர்கள் பெரும்பாலும் ஆன் சீனர்களாக இருப்பினும் இந்திய, மலாய் மற்றும் வங்காள தேசத்தினரும் வணிகம் செய்கின்றனர்.
காட்சிக்கூடம்
- "பச்சை டிராகன்" முகப்பின் அண்மித்த காட்சி
- பச்சை டிராகனின் பின்புறமுள்ள வரிசையான கடைகள்