பெங் லியென்

பெங் லியென் (Peng Liyuan, எளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: 彭麗媛; பின்யின்: Péng Lìyuán; பிறப்பு : நவம்பர் 20, 1962) புகழ்பெற்ற சீன நாட்டார் இசைப் பாடகரும் தற்போதைய துணை அரசுத் தலைவர் சீ சின்பிங்கின் இரண்டாவது துணைவியாரும் ஆவார். சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியாக சீனத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு வந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர்.[1] நாடெங்கும் நடந்த இசைப்போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றவர்.[1]

பெங் லியென்
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 20, 1962 (1962-11-20)
பிறப்பிடம்யுங்செங் வட்டம், சான்டொங், சீன மக்கள் குடியரசு
இசை வடிவங்கள்சீன நாட்டார், ஓபரா
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1982நடப்பு
இணையதளம்பெங் லியென்னின் வலைத்தளம்

சின்பிங் சியாமென் நகர துணை மேயராக இருந்த போது, லி யென்னைத் திருமணம் செய்து கொண்டார்.[2] சீனாவின் மக்கள் விடுதலைப் படையில் குடிசார் உறுப்பினராக உள்ள இவருக்கு மேஜர் ஜெனரலுக்கு இணையானப் பதவி வழங்கப்பட்டுள்ளது.[1]

சான்றுகோள்கள்

  1. Page, Jeremy (February 13, 2012, 5:55 PM HKT). "Meet China’s Folk Star First Lady-in-Waiting". The Wall Street Jorunal. பார்த்த நாள் November 07, 2012.
  2. "சீன புதிய ஜனாதிபதியின் மனைவி பிரபல பாடகி". Lankasri world (நவம்பர் 16, 2012). பார்த்த நாள் நவம்பர் 16, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.