பூவண்ணன்

பூவண்ணன் (இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன்) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியரராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955 இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் எழுதிய உப்பில்லாத பண்டம் முதல் பரிசைப் பெற்றது. மேலும் இவர் எழுதிய ஆலம் விழுது, காவேரியின் அன்பு ஆகிய இரண்டு சிறார் நெடுங்கதைகளும் நம்ம குழந்தைகள், அன்பின் அலைகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு. இந்தப்படங்களுக்காக பூவண்ணனுக்கு தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கதாசிரியர் விருது கிடைத்தது..[1]

பூவண்ணன்

பிறப்பு வே. தா. கோபாலகிருஷ்ணன்

தமிழ்நாடு
புனைப்பெயர் பூவண்ணன்
தொழில் எழுத்தாளர், பேராசிரியர்
நாடு இந்தியர்
கல்வி முனைவர்
இலக்கிய வகை குழந்தைகள் இலக்கியம்

எழுதிய நூல்கள் சில

  • சபாஷ் மணி, (நெடுங்கதை), 1949 நவம்பர்; குழந்தைப் பதிப்பகம், சென்னை.
  • குழந்தை இலக்கிய வரலாறு
  • குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு); 1982 நவம்பர்; வானதி பதிப்பகம், சென்னை.
  • சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
  • உப்பில்லா பண்டம் (நாடகம்)
  • ஆலம் விழுது
  • காவேரியின் அன்பு
  • நேதாஜி கதை (வாழ்க்கை வரலாறு)
  • வீரமணி (நெடுங்கதை)

மேற்கோள்கள்

  1. ஆதி வள்ளியப்பன் (2016 நவம்பர் 15). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 20 நவம்பர் 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.