பூண்டி அரங்கநாத முதலியார்

அரங்கநாத முதலியார் என்னும் தமிழறிஞர் 1837 ஆம் ஆண்டில் பூண்டியில் பிறந்தார்.[1] எனவே பூண்டி அரங்கநாத முதலியார் என அழைக்கப்பட்டார்.

கல்வி

கணிதத்தில் கலை முதுவர் பட்டம் (Master of Arts in Mathematics) பெற்றார்.[1]

பணி

பெல்லாரி மாவட்டப் பள்ளி (Bellary Provincial School), கும்பகோணம் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கணிதப் பேராசிரியராகவும் சென்னை மாகாண நிர்வாகத்தால் ஏற்பளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.[2]

பட்டம்

ஆங்கில அரசாங்கத்திடம் திவான் பகதூர் பட்டம் பெற்றவர்.[1]

இயற்றிய நூல்

கச்சிக் கலம்பகம் என்னும் நூலை இயற்றினார்.[1]

மறைவு

1893ஆம் ஆண்டில் மறைந்தார்.[1]

சான்றடைவு

  1. கந்தையா பிள்ள ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி: புலவர் அகர வரிசை, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, மு.பதிப்பு 1952, பக்.19
  2. வைத்தியநாதன் கே, தினமணி செம்மொழிக்கோவை 2010, சென்னை, பக்.275
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.