புஷ்கர்

புஷ்கர் இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம். இந்துக்கள் வழிபடும் முக்கிய புனிதத் தலங்களில் இதுவும் ஒன்று. புஷ்கர் நகரின் புஷ்கரணி எனும் புனித குளமும், பிரம்மன் கோயிலும், ஒட்டகத் திருவிழாவும் புகழ் பெற்றவையாகும். அருகில் உள்ள பெரு நகரம் அஜ்மீர்.

புஷ்கர்
நகரம்
புஷ்கரணியின் காட்சி
அடைபெயர்(கள்): தீர்த்தராஜ் புஷ்கர்
நாடு இந்தியா
மாநிலம்ராஜஸ்தான்
மாவட்டம்அஜ்மீர்
ஏற்றம்510
மக்கள்தொகை (2001)
  மொத்தம்14,789
மொழிகள்
  அலுவல் மொழிகள்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்305022

பெயர்க் காரணம்

புஷ்கர் என்றால் சமசுகிருதத்தில் நீலத்தாமரை என்று பொருள்..[1] இந்துக்களின் புராணத்தின்படி, பிரம்மா பூமியில் செய்யவிருக்கும் யாகத்திற்கு இடம் தேவைப்பட்டது. இதனால், அன்னம் தாமரையை இடும் இடத்தை, தேர்வு செய்யலாம் என்ற யோசனை எழவே, அவ்வாறே செய்யப்பட்டது. தாமரை மலர் விழுந்த இடமே புஷ்கர் எனப்பட்டது. தாமரைக் கொடிகள் நிறைந்த குளத்தை புஷ்கரணி என்பர்.

மக்கள் வகைப்பாடு

2001ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, புஷ்கர் நகரத்தின் மொத்த மக்கட்தொகை 14,789, அவர்களில் ஆண்கள் 54[[விழுக்காடு]], பெண்கள் 46விழுக்காடு. எழுத்தறிவு 69விழுக்காடு, ஆறு வயதிற்குட்டவர்கள் 14விழுக்காடு ஆகும்.[2]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. A. Kalyanaraman. Aryatarangini, the saga of the Indo-Aryans, Volume 2. Asia Pub. House, 1970. பக். 551.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.