ஈர்ப்பு விசை

ஈர்ப்பு விசை அல்லது பொருள் ஈர்ப்பு விசை அல்லது புவி ஈர்ப்பு விசை என்பது இயற்கையாக பொருட்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் விசை, அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்தில் இருப்பது ஆகும். ஈர்ப்பு விசை என்பது பொருட்களை கைவிடும் பொழுது அவை கீழே விழுவதற்கும் மற்றும் அவைகளுக்கு எடையை கொடுப்பதுமே ஆகும். அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசை ஆகும். இவ்விசையானது பொருள்களின் திணிவுகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில், பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது 'ஈர்ப்பியல் விசை' எனவும் வழங்கப்படும். ஈர்ப்பு விசை பிரிந்திருக்கும் பொருட்களை ஒன்று சேர்பதற்கும், ஒன்று சேர்ந்த பொருட்கள் அப்படியே இருபதற்கும் உதவுகிறது. இதனால் பூமி, சூரியன், மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பரவலான பொருட்கள் அப்படியே இருப்பதற்கு பங்களிக்கிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களை அதன் சுற்றுப்பாதையில் சுற்றவைப்பதற்கும்; சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கும்; அலைகள் உருவாவதற்கும்;திரவ போக்கு அதன் அடர்த்தி மாறல் விகிதம் மற்றும் புவியீர்ப்பை பொறுத்து செல்வதற்கும்; உருவாகும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் உள்ளே அதிக வெப்பம் உருவாகுவதற்கும்; மற்றும் பூமியில் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுவதற்கும் காரணியாக ஈர்ப்பு விசை உள்ளது.

ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான அணுக்கரு விசை, வலுக்குன்றிய அணுக்கரு விசை ஆகியன இயற்கையின் நான்கு அடிப்படை விசைகள் ஆகும். நவீன இயற்பியல் ஈர்ப்பு விசையை, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மூலமாக அனைத்து அசைவற்ற பொருட்களின் இயக்கத்தை விளக்குகிறது. நியூட்டனின் எளிய பிரபஞ்ச ஈர்ப்பு விதி மிக அதிக இடங்களில் துல்லியமான தோராய மதிப்பை வழங்குகிறது.

மேற்கோள்கள்

  1. Ball, Phil (June 2005). "Tall Tales". Nature News. doi:10.1038/news050613-10.
  2. கலீலியோ கலிலி (1638), Two New Sciences, First Day Salviati speaks: "If this were what Aristotle meant you would burden him with another error which would amount to a falsehood; because, since there is no such sheer height available on earth, it is clear that Aristotle could not have made the experiment; yet he wishes to give us the impression of his having performed it when he speaks of such an effect as one which we see."

வெளி இணைப்புகள்

  • Hazewinkel, Michiel, ed. (2001), "Gravitation", Encyclopedia of Mathematics, Springer, ISBN 978-1556080104
  • Hazewinkel, Michiel, ed. (2001), "Gravitation, theory of", Encyclopedia of Mathematics, Springer, ISBN 978-1556080104
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.