புள்ளிக்குவியமில்குறை

புள்ளிக்குவியமில்குறை (Astigmatism) எனும் இக்குறைபாட்டில் விழிவெண்படலம் அல்லது வில்லையின் மேற்பரப்பு ஒழுங்கற்றதாகவோ அல்லது வீக்கமான துருத்தமாகவோ காணப்படுகிறது, இதனால் கண்ணின் ஒருபகுதியில் ஒளிச்சிதறல் அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ காணப்படும், இதனால் ஏற்படும் பிம்பங்கள் சரிவரக் குவிக்கப்படுவதில்லை.[1] பொருளின் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னால் மையோபியா போன்றும் மற்ற பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னால் ஹைப்பர் மெட்ரோபியா போன்றும் குவிக்கப் படுகின்றன. புள்ளிக்குவியமில் குறைபாட்டைக் கண்ணுக்கு முன் உருளைவில்லை வைத்துச் சரிசெய்யலாம். இந்த வில்லையின் புறப்பகுதியின் வளைப்பகுதி மாறுபட்டுக் காணப்படுவதால் இது கண்ணின் குறைபாட்டினைச் சரி செய்கிறது.[2]

புள்ளிக்குவியமில்குறை
புள்ளிக்குவியமில் குறையுடையோருக்கு பல்வேறு தொலைவுகளில் தெளிவின்மை காணப்படுகிறது
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புOphthalmology
ஐ.சி.டி.-10H52.2
ஐ.சி.டி.-9367.2
OMIM603047
நோய்களின் தரவுத்தளம்29648
MedlinePlus001015
MeSHD001251

உசாத்துணை

  1. "Facts About Astigmatism" (October 2010). பார்த்த நாள் 29 September 2016.
  2. A K, Khurana (2007). Comprehensive Ophthalmology. NEW AGE INTERNATIONAL (P) LIMITED, PUBLISHERS. பக். 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-224-2480-5.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.