புரோடிஸ்ட்டா
புரோடிஸ்ட்டா விளக்கம்
- ஒரு செல் பாசிகள்
- புரோட்டோசோவாக்கள்
ஆகியவைகள் அனைத்தும் புரோடிஸ்ட்டா எனப்படும் அதிநுண்ணுயிரிகள் ஆகும்.

புரோடிஸ்ட்டாக்கள்
புரோடிஸ்ட்டாவின் பண்புகள்
- புரோடிஸ்ட்டா உலகத்தில் ஒரு செல்லால் ஆன யூகேரியாட்டுகள் அடங்கும்.
- தாவர,விலங்கு புரோடிஸ்ட்டாக்கள் கடல் நீர் மற்றும் நன்னீரில் காணப்படும்.
- சில புரோடிஸ்ட்டாக்கள் ஒட்டுண்ணிகள்
- புரோடிஸ்ட்டாக்கள் உட்கரு சவ்வினால் சூழப்பட்ட உட்கரு காணப்படும்.
- சில புரோடிஸ்ட்டா பச்சயத்தை கொண்டுள்ளதால் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. (எ.கா-யூக்ளினா)
புரோடிஸ்ட்டா வகைகள்
- தாவர புரோடிஸ்ட்டா -ஒரு செல் பாசிகள் (எ.கா-வால்வாக்ஸ் , கிளாமிடோமோனஸ்)
- விலங்கு புரோடிஸ்ட்டா-புரோட்டோசோவான்கள் எனப்படும் அமீபா, பாரமீசியம்.
புரோடிஸ்ட்டாவில் 59,950 உயிரினங்கள் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- "Protist-புரோடிஸ்ட்டா". பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.
- "protista- taxonomy". tamilnadu text book corporation. பார்த்த நாள் 23 செப்டம்பர் 2017.
- ஏழாம் வகுப்பு -முதல் பருவம் 'அறிவியல் பாடப்புத்தகம் வெளியீடு:தமிழ்நாடு பாடநூல் கழகம், பக்கம் எண்:155,157.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.