புரட்சி

புரட்சி அல்லது எழுச்சி( "ஓர் திருப்பம்" எனப் பொருள்படும் இலத்தீன் சொல் revolutio ) என்பது ஒரு குறுகிய காலத்தில் வல்லமையில் அல்லது ஓர் நிறுவன கட்டமைப்பில் ஓர் அடிப்படை மாற்றம் ஆகும். அரிசுட்டாட்டில் இருவித அரசியல் புரட்சி பற்றி விபரித்துள்ளார்:

  1. ஓர் அரசியல் அமைப்பிலிருந்து இன்னுமொன்றுக்கு பூரணமாக மாற்றுவது.
  2. இருக்கும் அரசியல் அமைப்பை திருத்துவது.[1]

உலக வரலாற்றில் முறைகள், காலம், கருத்தியல் தூண்டல் ஆகியவற்றினால் பல்வேறு பரந்த புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விளைவு கலாச்சாரம், பொருளாதாரம், சமூக-அரசியல் நிறுவனம் ஆகியவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

மார்க்சிய பார்வை

ஆளும் வர்க்கத்தின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தை அமர்த்துவதன் மூலம் தனியுடைமை சமுதாயத்தை முடிவுக்குக் கொண்டுவருதலும் , , வர்க்கமற்ற, சுரண்டலற்ற சமூகத்தை உருக்காகுவது புரட்சியாகக் கருதப்படுகிறது. [2]


புரட்சிகளின் பட்டியல்

  • கருமைப் புரட்சி - பெட்ரோலியம்
  • தங்கப் புரட்சி - தோட்டக்கலை / தேன் புரட்சி
  • பிங்க் [ இளஞ்சிவப்பு ] - வெங்காயம் / இறால் உற்பத்தி
  • மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
  • அரக்குப் புரட்சி - தோல் / கோகோ உற்பத்தி
  • சாம்பல் புரட்சி - உரம் உற்பத்தி
  • சிவப்புப் புரட்சி - கறி / தக்காளி புரட்சி
  • சுற்றுப் புரட்சி - உருளை உற்பத்தி
  • வெள்ளிப் புரட்சி - முட்டை / கோழிப்பண்ணை
  • தங்க இழைப் புரட்சி - சணல் உற்பத்தி
  • வெள்ளி இழைப் புரட்சி - பருத்தி உற்பத்தி
  • சுற்றுப் புரட்சி - உருளை உற்பத்தி

குறிப்புக்கள்

  1. Aristotle, The Politics V, tr. T.A. Sinclair (Baltimore: Penguin Books, 1964, 1972), p. 190.
  2. "மார்க்சியத்தில் ‘புரட்சி’ என்பதற்கான விளக்கம் என்ன?". தமிழ் மார்க்சிஸ்ட். பார்த்த நாள் 29 செப்டம்பர் 2015.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.