புனித அந்தோனியார் ஆலயம், கச்சத்தீவு
புனித அந்தோனியார் ஆலயம் அல்லது புனித அந்தோனியார் திருத்தலம் சீனீகுப்பன் படையாட்சி என்பவரால் கச்சத்தீவில் கட்டப்பட்டது. இந்த ஆலயம் 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இது ஒரு கத்தோலிக்க தேவாலயமாகும்.[1] இங்கு ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வரும். கச்சதீவு அந்தோனியார் திருவிழா இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த இருநாட்டு மக்களும் சந்தித்து பொருட்களை பண்டமாற்று செய்ய வழிவகையாக இருந்துள்ளது. இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதித் தீவாக விளங்கிய கச்சதீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்குச் சொந்தமானது.[2]
புனித அந்தோனியார் ஆலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 9°23′0″N 79°31′0″E |
சமயம் | கிறிஸ்தவம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
நிலை | இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
நிறைவுற்ற ஆண்டு | ? |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- கச்சத்தீவு அன்றும் - இன்றும் ஏ. எஸ். ஆனந்தன்
- http://www.thinakkathir.com/?p=2121
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.