புதிரை வண்ணார்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் துணிகளைச் சலவை செய்து கொடுத்தல், அவர்களின் பிற தேவைகளை செய்து கொடுத்தல் போன்ற தொழில்களைச் செய்யும் சமுதாயத்தினராக, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக புதிரை வண்ணார் சமுதாயத்தினர் இருந்தனர். இந்த சமுதாயத்தினர் சமூக, பொருளாதார நிலைகளில் இன்னும் தாழ்ந்த நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
புதிரை வண்ணார் நல வாரியம்
தமிழ்நாட்டில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் சாதியினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசால் “தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தலைவராகவும், அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 12 அரசு அதிகாரிகளும், அலுவல் சாராத உறுப்பினர்களாக 13 உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர். இந்த வாரியத்தின் மூலம் புதிரை வண்ணார் சாதியினருக்கான நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன.
பரவலர் பண்பாட்டில்
புதிரை வண்ணார் வாழ்க்கையை மையமாக கொண்டு மாடத்தி என்ற திரைப்படத்தை லீனா மணிமேகலை இயக்கியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
- பவித்ரா (2019 மே 17). "தணிக்கைத் துறை ஒரு மூடர் கூடம்". செவ்வி. இந்து தமிழ். பார்த்த நாள் 22 மே 2019.