புடோல்

புடோல் அல்லது புடலை, snake gourd, தாவர வகைப்பாடு: Trichosanthes cucumerina ) என்பது வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனம் ஒன்றாகும். இதன் காய் புடலங்காய் எனப்படுகிறது. இக் காய்கள் சுமார் 1.5 மீ நீளம் வரை வளரக் கூடியவை. பொதுவாக இவை 50 செ.மீ இருந்து 75 செ.மீ நீளமுடையவை. இந்திய, தமிழர் சமையலில் இடம் பெற்ற காய். இது குழம்பு, கூட்டு, பொறியல் என பல் வகையாக சமைக்கக் கூடியது. தெற்காசியா, தென்கிழக்காசியா நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் விளைச்சல்[1] குறைவாக இருக்கும் காலங்களில், சிவந்த புடலங்காய், தக்காளிக்கு மாற்றாகவும், சமையலில் பயன்படுத்தப்படுகிறது.

Trichosanthes cucumerina
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Cucurbitales
குடும்பம்: வெள்ளரிக் குடும்பம்
பேரினம்: Trichosanthes
இனம்: T. cucumerina
இருசொற் பெயரீடு
Trichosanthes cucumerina
லி..

வாழிடங்கள்

இதன் தாயகத்தைக் குறிப்பிட்டு சொல்ல இயலாது. ஏனெனில்,Trichosanthes cucumerina என்ற தாவரயினமானது, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா, இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பாக்கித்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தென்சீனா, (குவாங்ஷி, யுன்னான்).[2] ஆகிய நாடுகளின் காடுகளில்,அதனதன் நாட்டு இனமாக கண்டறியப்பட்டுள்ளது. வட ஆத்திரேலியாவிலும் இது,அந்நிலத்தின் நாட்டு இனமாகக் கருதப்படுகிறது.[3][4] புளோரிடாவிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும்,[5] இந்தியப் பெருங்கடல், பசிபிக் தீவுகள் தீவுகளிலும் இவை அறிமுகப்படுத்தப்பட்டு இயல்பாக வளருகின்றன.[6]

காட்சியகம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.