பீட்டர் புரூகல்

பீட்டர் புரூகல் (Pieter Brueghel 1525 - செப்டெம்பர் 9, 1569) ஒரு நெதர்லாந்து மறுமலர்ச்சி ஓவியர் ஆவார். இவர் நிலத்தோற்றம், குடியானவர்கள் தொடர்பிலான காட்சிகளை வரைவதில் பெரிதும் அறியப்பட்டவர். இதனால், பிற புரூகல் குடும்பத்தவர்களிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை குடியானவர் புரூகல் (Peasant Bruegel) என்றும் அழைத்தனர்.

புரூகல்
Bruegel's The Painter and The Connoisseur drawn c. 1565 is thought to be a self-portrait
தேசியம்டச்சு அல்லது பிளெமியர்
அறியப்படுவதுஓவியம், அச்சாக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்டூலே கிரிட் (c. 1562)
குடியானவர் திருமணம் (1568)
அரசியல் இயக்கம்மறுமலர்ச்சி

பீட்டர் புரூகல் நெதர்லாந்தில் உள்ள பிரெடா என்னுமிடத்தில் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும், இது, டச்சு நகரான பிரெடாவையா அல்லது இலத்தீன் மொழியில் பிரெடா எனப்படும் பெல்ஜிய நகரான பிரீயைக் குறிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர் பீட்டர் கோக் வான் ஏல்ஸ்ட் என்பவரிடம் தொழில் பழகினார். பின்னர் இவரது மகளையே புரூகல் மணம் செய்துகொண்டார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.