பீட்டர் சாக்கப் இச்செலம்

பீட்டர் சாக்கப் இச்செலம் (Peter (Petter) Jacob Hjelm, 2 அக்டோபர் 1746 – 7 அக்டோபர் 1813) என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் ஆவார். 1781 ஆம் ஆண்டில் முதன் முதலில் மாலிப்டினம் தனிமத்தைக் இவர் கண்டறிந்தார். மாலிப்டினம் கண்டறியபட்டு நான்காண்டுகளுக்குப் பின்னரே தனித்துப் பிரிக்கப்பட்டது.[1]

பீட்டர் சாக்கப் இச்செலம்
Peter Jacob Hjelm
பிறப்புஅக்டோபர் 2, 1746(1746-10-02)
சன்னர்போ அராத், சுமாலேண்டு, சுவீடன்
இறப்புஅக்டோபர் 7, 1813(1813-10-07) (அகவை 67)
டாக்கோல்ம், சுவீடன்
கல்வி கற்ற இடங்கள்உப்சாலா பல்கலைக்கழகம்

உப்சாலா பல்கலைக்கழகத்தில் இவர் தன்னுடைய படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்றார். கனிமவியல் பயிற்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பனியாற்றிய இவர் 1782 ஆம் ஆண்டில் இராயல் நாணய அடிப்பிடத்தின் தலைமைப் பொறுப்பு வகித்தார். 1784 ஆம் ஆண்டில் சுவீடிய இராயல் அறிவியல் பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார். கடைசியாக இவர் கனிமவியல் துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்தார்.

மேற்கோள்கள்

உசாத்துணை

  • Friedrich, Christoph (1989). "Deutsch-schwedische Wissenschaftsbeziehungen an der Universität Greifswald zwischen 1770 und 1850 unter besonderer Berücksichtigung von Chemie und Pharmazie". Berichte zur Wissenschaftsgeschichte 12 (3): 177–192. doi:10.1002/bewi.19890120307. பப்மெட்:11629776.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.