பீட்டர் கெனமன்

பீட்டர் கெனமன், (Pieter Gerald Bartholomeusz Keuneman, 3 அக்டோபர் 1917 - 3 சனவரி 1997) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவர்.

பீட்டர் கெனமன்
Pieter Keuneman
வீடமைப்பு, மற்றும் உட்துறை அமைச்சர்
பதவியில்
31 மே 1970  பெப்ரவரி 1977
கொழும்பு மத்தி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
20 செப்டம்பர் 1947  21 சூலை 1977
பின்வந்தவர் அலீம் இசாக்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 3, 1917(1917-10-03)
கொழும்பு, இலங்கை
இறப்பு 3 சனவரி 1997(1997-01-03) (அகவை 79)
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

பீட்டர் கெனமன் பேர்பெற்ற பரங்கியர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆதர் எரிக் கெனமன். தாயார் கண்டி செல்வந்தக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வைத்தியர்.[1][2]

கெனமன் கொழும்பு றோயல் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அங்கு மாணவர் தலைவர், இலக்கிய மன்றுகளின் தலைமை என பதவிகளை வகித்ததுடன் பல பரிசில்களையும் மாணவர்ப் பருவத்தில் தனதாக்கிக் கொண்டார். 1935இல் தனது உயர் படிப்புக்காக கேம்பிரிஜ் பென்புரொக் கல்லுரியில் சேர்ந்தார். அங்கு இடது சாரிக் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டார். வரலாறு, சமூகவியல் மற்றும் ஆங்கில இலக்கியம் என்பவற்றைக் கற்று கலைப் பட்டதாரி ஆனார். பின் சட்டம் கற்கத் தொடங்கினார். அதை நிறைவு செய்யாமலே வெளியேறினார். பின் தனது முதுகலைப் பட்டத்தையையும் கேம்பிரிஜிலேயே பெற்றார்.

சான்றாதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.