பிலிப்பீன் கழுகு

பிலிப்பைன் கழுகு (Philippine eagle, Pithecophaga jefferyi) அல்லது குரங்கு உண்ணும் கழுகு என்பது பிலிப்பீன்சு நாட்டைச் சேர்ந்த இரைதேடியுண்ணும் பறவை ஆகும். இது இந்நாட்டின் தேசியப் பறவை ஆகும். இதனை உள்ளூர் வாசிகள் "பட்டம்", "பறவைகளின் அரசன்" என்றெல்லாம் அழைக்கின்றனர். [2][3] இப்பறவை மண்ணிறவெள்ளை நிற இறகுகளையும், கரடுமுரடான முகடையும் கொண்டுள்ளது. இதன் நீளம் 86 தொடக்கம் 102 செ.மீ ஆகும். அத்துடன் இதன் நிறை 4.7 தொடக்கம் 8.0 கிலோகிராம் ஆகும். நீளத்தின் அடிப்படையில் பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். [4][5] பிலிப்பைன் கழுகு சட்டத்தினால் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. [2][6]

பிலிப்பீன் கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Accipitriformes
குடும்பம்: Accipitridae
பேரினம்: Pithecophaga
ஒகில்வி-கிரான்ட், 1896
இனம்: P. jefferyi
இருசொற் பெயரீடு
Pithecophaga jefferyi
ஒகில்வி-கிரான்ட், 1897
Range in blue green

மேற்கோள்கள்

  1. "Pithecophaga jefferyi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.
  2. Kennedy, R. S., Gonzales, P. C.; Dickinson, E. C.; Miranda, H. C., Jr. and Fisher, T. H. (2000). A Guide to the Birds of the Philippines. Oxford University Press, New York. ISBN 0-19-854669-6
  3. Almario, Ani Rosa S. (2007). 101 Filipino Icons. Adarna House Publishing Inc. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:971-508-302-1.
  4. Tabaranza, Blas R., Jr. (சனவரி 17, 2005). "The largest eagle in the world". Haribon Foundation. பார்த்த நாள் செப்டெம்பர் 23, 2012.
  5. BirdLife International. (2004). Pithecophaga jefferyi. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது சனவரி 7, 2009.
  6. "Farmer arrested for killing, eating rare Philippines eagle: officials". AFP (2008-07-18). பார்த்த நாள் 2009-01-07.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.